எரிபொருள் நெருக்கடி! தொடருந்து சேவைகளில் அதிகரிக்கும் அழுத்தம் - விடுக்கப்பட்ட அவசர கோரிக்கை
எரிபொருள் வழங்கும் நாடுகளுக்கு இடையே ஏற்படக்கூடிய ஸ்திரமற்ற நிலைமைகள் காரணமாக, இலங்கையிலும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக இலங்கை தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.
QR குறியீட்டு பதிவில் புதிய சிக்கல்! ஒன்றுக்கு மேற்பட்ட வாகனங்களை வைத்திருப்போருக்கு முக்கிய அறிவுறுத்தல்
எரிபொருள் தட்டுப்பாடு
இவ்வாறானதொரு நிலைமை ஏற்படக்கூடும் என்பதை முன்கூட்டியே கணித்து, கடந்த 4ஆம் திகதி தொடருந்து திணைக்களத்திற்குத் தெளிவுபடுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் போது தனியார் வாகனங்களின் பயன்பாடு குறைந்து, அலுவலக ஊழியர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் தினசரி பயணம் செய்யும் பொதுமக்கள் பொதுப் போக்குவரத்து சேவைகளை நாடுவதும் தவிர்க்க முடியாதது.
குறிப்பாக, நகர்ப்புற மற்றும் புறநகர் பகுதிகளில் நாளாந்த போக்குவரத்துத் தேவைகள் அதிகரிப்பதன் காரணமாக, தற்போதுள்ள பொதுப் போக்குவரத்து கட்டமைப்பின் மீதான அழுத்தம் அதிகரிக்கக்கூடும் என்றும் அந்தச் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
முன்மொழியப்பட்ட யோசனைகள்
அதன்படி, போக்குவரத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இரயில்வே சேவையை உடனடியாக விரிவுபடுத்தி வலுப்படுத்த வேண்டியது அவசியமானதால், அப்பணிகளைத் தாமதமின்றிச் செயல்படுத்த வேண்டியுள்ளது.

எனவே, போக்குவரத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு தொடருந்து சேவையை விரைவாக விரிவுபடுத்தி வலுப்படுத்துவது அவசியமான ஒன்றாகும்.
இந்தச் செயல்பாடுகளைத் தாமதமின்றி முன்னெடுப்பதற்காக, ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தினால் முன்மொழியப்பட்ட யோசனைகளை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பூஜையில் வெளிவந்த பயங்கரமான விஷயம், ஷாக்கான குடும்பத்தினர்... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam