eZCash மற்றும் mCash பரிவர்த்தனை ஊடாக பாரிய மோசடி! கடுமையாகும் சட்டம்
போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுடன் தொடர்புடைய சட்டவிரோத பரிவர்த்தனைகளுக்காக eZCash மற்றும் mCash-ஐப் பயன்படுத்தும் நபர்களை அடையாளம் காணும் நடவடிக்கைக்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சு தலைமையிலான குழு, சட்ட நடவடிக்கை குறித்த பரிந்துரைகளைச் சமர்ப்பித்திருந்தது.
QR குறியீட்டு பதிவில் புதிய சிக்கல்! ஒன்றுக்கு மேற்பட்ட வாகனங்களை வைத்திருப்போருக்கு முக்கிய அறிவுறுத்தல்
அமைச்சரவை ஒப்புதல்
சந்தேகநபர்களை அடையாளம் காண்பதற்காக, இலங்கை மத்திய வங்கி, இலங்கை பொலிஸ் மற்றும் ஆட்பதிவுத் திணைக்களம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து ஒரு தரவுத்தளம் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்களை அடையாளம் கண்டு அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காக, பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் சமர்ப்பித்த முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
தாமதமாகும் எரிபொருள் கப்பல்கள்! சிங்கள-தமிழ் புத்தாண்டில் அத்தியாவசிய பொருட்களின் விலைகளில் மாற்றம்