கொழும்பு -பாலாவி தொடருந்து சேவை ஆரம்பம் தொடர்பான அறிவிப்பு
கொழும்பிலிருந்து புத்தளம் பாலாவி வரையிலான தொடருந்து சேவை இன்று (19) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
'டித்வா' சூறாவளி காரணமாக, நாடு முழுவதும் பல தொடருந்து பாதைகள் சேதமடைந்தன, அந்த சூழலில், நீர்கொழும்பிலிருந்து புத்தளம் வரையிலான தொடருந்து பாதை கடுமையாக சேதமடைந்தன.
53 நாட்களுக்குப் பின்னர் சேவை
பாய்ந்து வந்த நீரில், பட்டுலு ஓயா பாலத்திற்கு அருகிலுள்ள தொடருந்து பாதையின் 200 அடிக்கும் அதிகமான பகுதி முழுமையாக சேதமடைந்தது.
மஹாவெவ பகுதியில் கடுமையாக சேதமடைந்த பகுதி புனரமைக்கப்பட்ட பின்னர், சிலாபம் வரையிலான ரயில் சேவை நடத்தப்பட்டது.
தொடருந்து திணைக்களத்தின் பாதை பராமரிப்பு சேவை பிரிவின் ஊழியர்கள் இந்த ரயில் பாதையின் சேதமடைந்த பகுதிகளை படிப்படியாக புனரமைத்தனர்.

அதன்படி, அதன் பராமரிப்பு பணிகள் நேற்று (18) நிறைவடைந்தன. அதன்படி, 53 நாட்களுக்குப் பிறகு இன்று (19) காலை புத்தளம் பாலாவி வரை அலுவலக தொடருந்து இயக்கப்பட்டதாக தொடருந்து திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.