'டித்வா'வில் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பில் பேராசிரியர் வெளியிட்ட மறைக்கப்பட்ட உண்மைகள்...
'டித்வா' சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையை மீளமைக்க போதுமான பணம் கிடைக்கவில்லை.மதிப்பீடு இல்லாமல் அரசு அறிவித்த ஐந்து இலட்சம் ரூபா பணம் கூட வழங்கவில்லை என பேராதெனிய பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர் பிரசன்ன பெரேரா தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையபற்றும் போதே இதனை தெரிவித்தார்.தொடர்ந்துரையாற்றிய அவர்,
பாதிப்பின் உண்மை தன்மை
மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்காக தங்க ஆபரணங்களை அடகு வைத்துள்ளனர்.பாதிக்கப்பட்ட மக்களின் கடன்கள் படிப்படியாக அதிகரித்துள்ளன.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யும் அரச நிறுவனங்களுக்கு இடையே எவ்வித தொடர்பும் இல்லை. 2026 பட்ஜெட் மதிப்பீட்டின் பின்னர் நிவாரணம் வழங்க ஒதுக்கப்பட்ட குறைநிரப்பு பிரேரணை மதிப்பீடும் போதுமானதாக இல்லை.
மீட்பு பணியின் போது நீண்டகால பிரச்சினைகளை அரசாங்கம் கவனிக்க வேண்டும். எதிர்க்கட்சி தலைவர் சஜித் முன்மொழிந்த நன்கொடை மாநாட்டின் மூலம் இதை அடைய முடியும்.

பேரழிவின் மொத்த இழப்பு சர்வதேசத்திற்கு அறிவிக்கப்பட வேண்டும்.பேரழிவின் மொத்த இழப்பு 6 பில்லியன் அமெரிக்க டொலராகும். அனர்த்தத்தில் ஏற்பட்ட மொத்த இழப்புகளை அரசாங்கம் மதிப்பிட வேண்டும்.
அரசு அனைத்துக் கட்சி மாநாட்டைக் கூட்ட வேண்டும்.மேலும் நன்கொடை மாநாடும் முக்கியமானது என குறிப்பிட்டுள்ளார்.
உலக அரசியலில் பதற்றம்: ட்ரம்பின் நகர்வு சர்வாதிகாரமா..! அ. யோதிலிங்கம் 8 நிமிடங்கள் முன்
பிக் பாஸ் டைட்டில் ஜெயித்த திவ்யாவுக்கு ரூ.50 லட்சம் மட்டுமின்றி மேலும் ஒரு பெரிய பரிசு! என்ன பாருங்க Cineulagam