மட்டக்களப்பு - கொழும்பு கடுகதி தொடருந்தின் சிற்றுண்டிச்சாலையை மூடுமாறு நீதிமன்றம் உத்தரவு
மட்டக்களப்பில் இருந்து கொழும்பிற்கு செல்லும் பாடுமீன் நகர்சேர் கடுகதி தொடருந்திலுள்ள சிற்றுண்டிச்சாலையை தற்காலிகமாக மூடுமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றினால் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன்படி சிற்றுண்டிச்சாலையில், உணவுப் பாதுகாப்பு இல்லாமல் வியாபாரம் செய்தமை தொடர்பாக அதன் உரிமையாளருக்கு எதிராக பொது சுகாதார பரிசோதகர்கள் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இதனையடுத்து, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் எதிர்வரும் 8ஆம் திகதி வரை தற்காலிகமாக குறித்த சிற்றுண்டிச்சாலையை மூடுமாறு நேற்று (23.01.2024) மட்டக்களப்பு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
திருத்த வேலைகள்
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் வைத்தியர் சுகுணன் தலமையில் பொது சுகாதார பரிசோதகர்கள் குழுவினர் பிரபல உணவகங்கள் மற்றும் தொடருந்து சிற்றுண்டிச்சாலை, போன்றவற்றை திடீர் முற்றுகையிட்டு சோதனை நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இதன் போது, பல உணவகங்களில் மனித பாவனைக்கு உதவாத பல பொருட்களை மீட்டு அழித்ததுடன் சில உணவகங்கள் திருத்த வேலைகளுக்காக மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |