நாடாளுமன்ற மின்கட்டண நிலுவை விவகாரம்: விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ள காஞ்சன விஜேசேகர
நாடாளுமன்றம் மற்றும் ஜனாதிபதி அலுவலகம் என்பவற்றில் பாரிய மின்கட்டண நிலுவை இருப்பதாக தெரிவிக்கப்படும் கருத்துக்களை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர மறுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் நேற்றைய தின (23.01.2024) அமர்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நாடாளுமன்றம் மற்றும் ஜனாதிபதி அலுவலகம் என்பவற்றில் பாரிய மின்கட்டண நிலுவை இருப்பதாக மின்சார சபை ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜயலால் அண்மையில் குற்றம் சாட்டியிருந்தார்.
குற்ற விசாரணை
மேலும், அவரது உரையை மேற்கோள் காட்டி சமீப நாட்களில் ஊடகங்களிலும் அது தொடர்பான செய்திகள் வெளியாகியிருந்தன.
நாடாளுமன்றத்தின் சிறப்புரிமையை மீறும் வகையில் பொய்யான தகவல்களை மக்கள் மயப்படுத்திய குற்றத்துக்காக ரஞ்சன் ஜயலாலை, நாடாளுமன்ற சிறப்புரிமைக்குழுவின் முன் அழைத்து விசாரிக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 50 நிமிடங்கள் முன்

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு... செயல்பாடுகளை நிறுத்தும் பெரும் தொழில்நுட்ப நிறுவனம் News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri
