சுதந்திரக் கட்சி தலைமையில் புதிய கூட்டமைப்பு: கொழும்பில் முக்கிய கலந்துரையாடல்
சிறிலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான பொதுக் கூட்டமைப்பு ஒன்றை எதிர்காலத்தில் உருவாக்குவது தொடர்பில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தலைமையில், கொழும்பு - டாலி வீதியிலுள்ள சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.
பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி தற்போது நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களான அனுர பிரியதர்சன யாப்பா, நிமல் லான்சா மற்றும் அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த, நளின் பெர்னாண்டோ மற்றும் இராஜாங்க அமைச்சர் ஜகத் புஸ்பகுமார ஆகியோர் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர் என்று கூறப்பட்டுள்ளது.
கம்யூனிஸ்ட் மற்றும் சமசமாஜ கட்சி
அத்துடன், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சாரதி துஷ்மந்த மித்ரபால, அமைச்சர் மகிந்த அமரவீர, இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண உள்ளிட்டோரும் இதில் பங்கேற்றிருந்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தக் கூட்டணி தொடர்பில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சமசமாஜ கட்சி என்பவற்றுடன் கலந்துரையாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam

நிறைய பேரிடம் கடன் வாங்கி இருக்கிறார், அண்ணனுக்கு உதவ முடியாது.. திட்டவட்டமாக தெரிவித்த நடிகர் பிரபு Cineulagam
