தென்னிலங்கையின் துப்பாக்கிச்சூடு சம்பவங்களுக்கு காரணம் இவர்களே : பகிரங்கப்படுத்தும் விக்னேஸ்வரன்
அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் இராணுவத்திலிருந்து வெளியேறிய, இளைப்பாறியவர்களே பெரும்பாலும் ஈடுபடுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை இன்று(23.01.2024) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
இது ஒரு பிரச்சினைக்குரிய விடயம். இராணுவத்திலிருந்து பெரும்பான்மையானோரை வெளியில் அனுப்பும் போது அதற்குரிய சர்வதேச ரீதியான நடவடிக்ககைகளை எடுக்குமாறு ஏற்கனவே நான் அரசாங்கத்திற்கு கூறியிருந்தேன்.
இராணுவ வாழ்க்கையிலிருந்து பொது வாழ்க்கைக்கு மாறஅவர்கள் செய்ய வேண்டிய நடைமுறைகள் சர்வதேச ரீதியாக கூறப்பட்டுள்ளது.
மற்ற நாடுகளில் இது தொடர்பான சட்டத்திட்டங்கள் காணப்படுகின்றது. அதே வேளை இராணுவத்திலிருந்து சிலர் துப்பாக்கிகளுடன் கள்ளத்தனமாக வெளியேறியுள்ளனர்.
சிலவேளைகளில் இராணுவத்தினரிடமிருந்து துப்பாக்கிகளை பணத்திற்கு வாங்கியும் வைத்துள்ளனர். எனவே இராணுவத்தினர் இது சம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 19 மணி நேரம் முன்

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam
