கொழும்பில் இருந்து பதுளைக்கு புதிய சொகுசு தொடருந்து சேவையை ஆரம்பிக்க நடவடிக்கை
கொழும்பில் இருந்து பதுளைக்கு புதிய சொகுசு தொடருந்து சேவையொன்றை ஆரம்பிக்க போக்குவரத்து அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
கொழும்பிலிருந்து பதுளைக்கு அடுத்த வார இறுதியில் இருந்து இந்த சொகுசு தொடருந்து சேவையில் ஈடுபடவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த தொடருந்துக்கு ‘எல்ல ஒடெஸி’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
சேவை நேரம்
இதற்கமைய “தொடருந்து ஒவ்வொரு சனிக்கிழமையும் அதிகாலை 05.30 மணிக்கு கொழும்பு கோட்டையிலிருந்து புறப்பட்டு பிற்பகல் 3.55 மணிக்கு பதுளையைச் சென்றடையும்.

இதனையடுத்து ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பதுளையிலிருந்து காலை 09.50 மணிக்குப் புறப்படும் புகையிரதம் இரவு 07.20 மணிக்கு கொழும்பை வந்தடையும்.
தொடருந்து பயணத்தின் போது கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலங்களில் தொடருந்து நிறுத்தப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
பாகிஸ்தானின் அணுசக்தி நிலையத்தை தாக்க இந்தியா-இஸ்ரேல் ரகசிய திட்டம்: CIA அதிகாரி வெளியிட்ட தகவல் News Lankasri
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam