ராகம போதனா வைத்தியசாலையில் ஏற்பட்ட திடீர் மின்தடை! தொலைபேசி வெளிச்சத்தில் சிகிச்சையளித்த வைத்தியர்கள்
கொழும்பு - ராகம போதனா வைத்தியசாலையில் திடீரென ஏற்பட்ட மின்தடை காரணமாக கையடக்க தொலைபேசி வெளிச்சத்தில் வைத்தியர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சையளித்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
ராகம போதனா வைத்தியசாலையின் மின் உற்பத்தி இயந்திரங்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நேற்றிரவு 9.30 மணியளவில் முழு வைத்தியசாலையிலும் மின்தடை ஏற்பட்டுள்ளது.
மின் உற்பத்தி இயந்திரங்களில் ஏற்பட்ட கோளாறு
இதன் காரணமாக நோயாளிகள் உட்பட ஒட்டுமொத்த ஊழியர்களும் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
இதன்போது உடனடியாக நோயாளிகளை பரிசோதிக்க வேண்டியிருந்தமையினால் வைத்தியர்கள் கையடக்கத் தொலைபேசி ஒளியைக் கொண்டு நோயாளிகளை பரிசோதித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து சுமார் ஒரு மணித்தியாலத்தின் பின்னர் மின்சார விநியோகம் சீரமைக்கப்பட்டு மின் விநியோகம் வழங்கப்பட்டதாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.