அம்பாந்தோட்டையில் அரிசி கொள்வனவிற்காக அலைமோதிய மக்கள்
அம்பாந்தோட்டை - அம்பலாந்தோட்டை வர்த்தகர் சங்கம், சிவப்பு அரிசியை கிலோ ஒன்றுக்கு 220 ரூபாய் என்ற கட்டுப்பாட்டு விலையில் விநியோகிக்க எடுத்த நடவடிக்கையால், நகரில் நீண்ட வரிசையில் காத்திருந்து பெரும் மக்கள் கூட்டம் அலைமோதியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஒரு நுகர்வோருக்கு தலா ஐந்து கிலோ கிராம் எடையுடைய அரிசி என்ற வகையில் கட்டுப்பாட்டு விலைக்கு வர்த்தகர் சங்கம் வழங்கியது.
எனினும், கையிருப்பு முடிந்ததும், நூற்றுக்கணக்கான நுகர்வோர் ஏமாற்றத்துடன் வெளியேறினர்.
கடும் தட்டுப்பாடு
தற்போது அப்பகுதியில் அரிசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் சிவப்பு அரிசியின் விலை கிலோ ஒன்றுக்கு 265 ரூபாவாக உயர்ந்துள்ளதாகவும் நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.

இதன்படி பிரதேசத்தில் உள்ள அரிசி ஆலை உரிமையாளர் ஒருவரின் உதவியுடன் கட்டுப்பாட்டு விலையில் சிவப்பு அரிசியை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தகர் சங்கத்தின் செயலாளர் அசேல மாரசிங்க தெரிவித்தார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ரஷ்யாவிற்காக வேறு நாட்டில் நாசவேலையில் இறங்கிய உக்ரேனியர்கள்: பகிரங்கப்படுத்திய பிரதமர் News Lankasri