யாழில் எரிபொருளுக்கு வரிசை!
யாழ்ப்பாணத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளுக்கு வரிசை காணப்படுகிறது.
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடாத்திய நிலையில் இவ்வாறு யாழில் எரிபொருளுக்கு வரிசை காணப்படுகிறது.
அந்தவகையில், யாழ்ப்பாணம் - சித்தங்கேணி பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில், எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு மக்கள் வரிசையில் நிற்பதை அவதானிக்க முடிந்தது.
மேலும் பொலிஸார் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் வாகனங்கள் வரிசையில் நிற்கும் போது போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.
வடமராட்சி
இஸ்ரேல் அமெரிக்கா ஈரான் யுத்தத்தை அடுத்து இன்றைய தினம் யாழ்ப்பாணம்-வடமராட்சியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளுக்கு வரிசை காணப்படுகிறது.
குஞ்சர் கடை, நெல்லியடி மந்திகை, கிராமக்கோடு பருத்தித்துறை ஆகிய எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் மிக நீண்ட வரிசையில் எரிபொருள் நிரப்புவதற்காக மக்கள் காத்திருக்கின்றனர்

24 மணி நேரத்தில் எந்தக் கப்பலும் கடக்க முடியவில்லை., அமெரிக்காவின் ஹார்முஸ் முற்றுகை தீவிரம் News Lankasri
முடிவுக்கு வரும் ஈரான் போர் நிறுத்தம்... மத்திய கிழக்கில் படைகளைக் குவிக்கும் அமெரிக்கா News Lankasri
முதல் நாளிலேயே தடுமாறிய ட்ரம்பின் ஹார்முஸ் முற்றுகை... அதிரடியாகக் கடந்த ஈரான் கப்பல்கள் News Lankasri