கட்டார் வாழ் இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கட்டார் வாழ் மக்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் விசேட பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. தேசிய அவசர எச்சரிக்கை நிலைமை விடுக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
பொதுமக்களின் பாதுகாப்பு கருதி இந்த எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ராணுவ தளங்களுக்கு அருகாமையில் இருப்பதனை தவிர்க்குமாறு அந்நாட்டு அரசாங்கம் நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
போர் பதற்றம்
முடிந்த அளவு வீடுகளுக்கு உள்ளேயோ அல்லது கட்டிடங்களுக்கு உள்ளேயோ இருக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

மிகவும் அத்தியாவசியமான தேவைகள் தவிர்ந்த ஏனைய விடயங்களுக்காக வீட்டை விட்டு வெளியே செல்வதனை தவிர்க்குமாறு கட்டார் அரசாங்கம் அந்நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
மிகவும் அத்தியாவசியமான தேவைகள் தவிர்ந்த ஏனைய பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் எனவும் ஆபத்துக்களை தவிர்ப்பதற்காக இந்த எச்சரிக்கை விடுக்கப்படுவதாகவும் கட்டார் நாட்டு அரசாங்கம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
குறிப்பிடத்தக்களவு இலங்கையர்கள் கட்டாரில் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் தாக்குதல் நடத்தியதாக வெளியான அறிவிப்புகளை தொடர்ந்து இந்த விசேட எச்சரிக்கை அறிவிப்பினை கட்டார் அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
இதேவேளை, கட்டாரின் சில பகுதிகளில் வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
சூடுபிடிக்கும் கள நிலவரம்: முக்கிய இடங்களை இலக்கு வைத்து தாக்குதல் - ஈரான் ஜனாதிபதி தொடர்பில் வெளியான தகவல்
காந்திமதியை வீட்டைவிட்டு துரத்திய சக்திவேல், கோமதி தரமான செயல்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam