மட்டக்களப்பில் திடீர் என்று உதித்த இராணுவக் குடியிருப்பு: TMVP தலைமையில் குடியேற்றப்படும் சிங்களவர்கள்!! நடப்பது என்ன? (Video)
மட்டக்களப்பு மாவட்டத்தில் புன்னைக்குடா கடற்கரைப் பிரதேசத்தில் பாரிய இரும்புக் குளாய்கள் கொண்டுவரப்பட்டு நிலத்தினுள் பதிக்கப்படும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதேவேளை, அருகில் இருக்கும் பனை-தென்னை மரங்களில் ‘இது இராணுவத்தின் சொத்து- அனுமதியின்றி நுழைவது தடைசெய்யப்பட்டுள்ளது’ என்ற அறிவிப்பு அட்டைகள் காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றன.
இதே பிரதேசத்தில் தென்னிலங்கையில் இருந்து கொண்டுவரப்பட்ட சிங்கள மக்களுக்கு காணிகள் வழங்கப்பட்டு அவர்களைக் குடியேற்றும் நடவடிக்கை ரீ.எம்.வி.பி. தலைமையில் அண்மையில் நடைபெற்றிருந்தது.
- எதற்காக அந்தக் குளாய்கள் மட்டக்களப்பு, புன்னைக்குடா கடற்கரையில் பதிக்கப்பட்டு வருகின்றன?
- குளாய்கள் பதிக்கப்பட்டுவரும் பிரதேசத்திற்கு அருகே எதற்காக இராணு எச்சரிக்கைகள் காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றன?
- அதே இடத்தில் எதற்காக சிங்கள மக்கள் குயேற்றப்படுகின்றார்கள்?
அந்தப் பிரதேச வாழ் மக்களின் இதுபோன்ற கேள்விகளுக்கு சரியான பதில் இதுவரை அவர்களுக்கு வழங்கப்படவில்லை.
பதிலைத் தேடுகின்ற ஒரு முயற்சியில் நாம் இறங்கிய போது, பல அதிர்ச்சிகரமான உண்மைகள் எமக்கு கிடைக்கப்பெற்றன.
தமிழ் மக்களின் வாழ்வியல் மாத்திரமல்ல, அவர்களது எதிர்கால இருப்பையே கேள்விக்குள்ளாக்கக்கூடிய பல சந்தேகங்களையும், கேள்விகளையும், எச்சரிக்கைகளையும் சுமந்து வருகின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி:





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 10 நிமிடங்கள் முன்

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
