யாழ்ப்பாணத்தில் பரீட்சை வினாத்தாளில் மோசடி
யாழ்ப்பாண கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகளில் கடந்த வாரம் இடம்பெற்ற ஆங்கில மொழி மூலம் விஞ்ஞான பரீட்சையில், தனியார் கல்வி நிலையத்தில் வழங்கப்பட்ட வினாத்தாள் வழங்கப்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் அருளம்பலம் உமாமகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

வடமாகாண கல்வி அமைச்சு
கடந்த வாரம் யாழ். கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு ஆங்கில மொழி மூலம் விஞ்ஞான பரீட்சை இடம்பெற்றுள்ளது.

குறித்த பரீட்சையில் வழங்கப்பட்ட வினாத்தாள் ஏற்கனவே தனியார் கல்வி நிலையம் ஒன்றினால் வழங்கப்பட்ட பரீட்சை வினாத்தாள் என்பது தெரியவந்தது.
இதன் அடிப்படையில் ஊடகங்களில் வெளிவந்த செய்தி தொடர்பில் வடமாகாண கல்வி அமைச்சுக்கு கவனம் செலுத்திய நிலையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
ஸ்பெயினில் இருந்து மொராக்கோவிற்கு திரும்பிய 37,500 அகதிகள்: பலி எண்ணிக்கை 57 ஆக அதிகரிப்பு News Lankasri
செங்கடல் முற்றுகையை எதிர்த்து புதிய கடற்படைக் கூட்டணி: அமெரிக்காவை நம்பாத வளைகுடா நாடுகள் News Lankasri
ஹார்ட் பீட் 3 வெப் தொடரில் அனுவாக நடிக்கப்போகும் பிரபல நடிகை... நியூ என்ட்ரி, யார் தெரியுமா? Cineulagam