இறப்பதற்கு முன்னர் மகாராணி இலங்கையருக்கு அனுப்பிய கடிதம்: வெளியான பின்னணி
இலங்கையில் நாளுக்கு நாள் புதுப் புது மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. சமூக, அரசியல் மற்றும் பொருளாதார ரீதியிலான நகர்வுகள், சர்வதேசம் திரும்பிப் பார்க்கும் வகையிலான அரசியல் மாற்றங்களும் அரங்கேறி வருகின்றன.
இந்த நிலையில் இன்று எமது தளத்தில் அதிகளவான செய்திகளை நாங்கள் பிரசுரித்திருந்தோம். அவற்றுள் நீங்கள் தவறவிட்ட முக்கிய செய்திகளை விசேட தொகுப்பாக உங்களுக்கு தருகின்றோம். நீங்கள் தவறவிட்ட செய்திகளை கட்டாயம் படிக்கவும்.
1 பிரித்தானியாவில் மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியுடன் கடிதத் தொடர்பு கொண்டிருந்த இலங்கையர் தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது. பொலன்னறுவை கல்லலெல்ல, சுது நெலுகம பிரதேசத்தை சேர்ந்த 72 வயதான லயனல் பிட்டியவத்தகே இவ்வாறு கடிதம் எழுதியுள்ளார்.
இலங்கை பிரஜையுடன் தொடர்பில் இருந்த பிரித்தானிய மகாராணி - வெளியான தகவல்>>>மேலும்படிக்க
2 தெற்காசியாவிலேயே மிக உயரமான கட்டிடமான கொழும்பு தாமரை கோபுரம் நேற்று பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.
சாதனை படைத்த கொழும்பு தாமரை கோபுரம்>>>மேலும்படிக்க
3 இசைஞானி இளையராஜா உட்பட அவரது இசைக்குழுவினர் சென்னையில் இருந்து கொழும்பு வழியாக அவுஸ்திரேலியா புறப்பட்டுச் சென்றுள்ளனர். கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய இசைஞானி இளையராஜா உட்பட இசைக்குழுவினருக்கு ஸ்ரீலங்கன் விமான சேவையின் ஊழியர்கள் சிறப்பான வரவேற்பை வழங்கியதாக விமான சேவை நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
கட்டுநாயக்க விமானம் நிலையத்திற்கு வந்த இசைஞானி இளையராஜா>>>மேலும்படிக்க
4 இலங்கை கிரிக்கெட் சபை புதிய செயல் திட்டம் ஒன்றினை நடைமுறைப்படுத்தவுள்ளது. இலங்கையின் தேசிய அணியில் திறமைகளை கொண்ட புதிய வீரர்களுக்கு வாய்ப்பினை பெற்றுக்கொடுக்கும் செயல் திட்டம் ஒன்றினையே இலங்கை கிரிக்கெட் சபை ஏற்பாடு செய்துள்ளது.
இலங்கை தேசிய கிரிக்கெட் அணியில் இணைய வாய்ப்பு: வெளியாகியுள்ள அறிவிப்பு>>>மேலும்படிக்க
5 இலங்கையில் காலணிகளின் விலைகள் அதிகரித்துள்ள நிலையில், எளிமையாக தவணை முறையில் பணத்தை செலுத்தி காலணிகளை கொள்வனவு செய்வதற்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க காலணி தயாரிப்பு நிறுவனங்கள் முன்வந்துள்ளன.
ஒரு ஜோடி காலணியின் (சப்பாத்து) விலையானது 7 ஆயிரம் ரூபாவுக்கும் மேல் இருப்பதால், அதற்கான விலையை தவணை முறையில் செலுத்த வசதி வழங்கப்பட்டுள்ளது.
காலணிகளை கொள்வனவு செய்ய தவணை முறை வசதி>>>மேலும்படிக்க
6 சிகிச்சைக்காக வெளிநாடு செல்லும் சிறுவர்களுக்கு விமான அனுமதிப் பத்திரத்தை பெற்றுக் கொடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் புதிய திட்டம்! வெளியானது அறிவிப்பு>>>மேலும்படிக்க
7 இலங்கையில் அரச ஊழியர்கள் வெளிநாட்டில் வேலை செய்வதற்கு மட்டுமன்றி உள்நாட்டில் வேலை செய்வதற்கு சம்பளமில்லாத விடுமுறையைப் பெறவும் அனுமதி வழங்கப்படுவதாக என பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபை மற்றும் மாகாண பொது விவகார அமைச்சு அறிவித்துள்ளது.
அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் அனுமதி! வெளியானது முழு விபரம்>>>மேலும்படிக்க
8 இலங்கையில் காலணிகளின் விலைகள் அதிகரித்துள்ள நிலையில், எளிமையாக தவணை முறையில் பணத்தை செலுத்தி காலணிகளை கொள்வனவு செய்வதற்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க காலணி தயாரிப்பு நிறுவனங்கள் முன்வந்துள்ளன.
காலணிகளை கொள்வனவு செய்ய தவணை முறை வசதி>>>மேலும்படிக்க
9 "இலங்கை மீது ஐ.நா. அடுக்கடுக்காகத் தீர்மானங்களை நிறைவேற்றினாலும் இங்கு எதுவும் நடக்கப்போவதில்லை. இதை சம்பந்தனும், அவர் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் புரிந்துகொள்ள வேண்டும்" என முன்னாள் அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
சம்பந்தனுக்கு பதிலடி கொடுத்த விமல்>>>மேலும்படிக்க
10 ஸ்மார்ட்போனை அப்டேட் செய்வதால் பல்வேறு மென்பொருள் பிரச்சினைகள் ஏற்படுவதாக புகார்கள் எழுந்துள்ள நிலையில், அடுத்த 2 மாதத்திற்கு பயனர்கள் தங்களது ஸ்மார்ட்போனை அப்டேட் செய்ய வேண்டாம் என அவரச அறிவுறுத்தலொன்று வழங்கப்பட்டுள்ளது. ரெட்மி, கூகுள் பிக்சல் என பலதரப்பட்ட ஸ்மார்ட்போன்கள் தங்களது பயனர்களுக்காக பல்வேறு அப்டேட்டுகளை வழங்கி வருகின்றன.
ஸ்மார்ட்போன் பயனாளர்களுக்கு அவசர அறிவித்தல்>>>மேலும்படிக்க