சீரான முறையில் எரிபொருள் விநியோகம்: எடுக்கப்பட்டுள்ள அதிரடி நடவடிக்கை
நாட்டிலுள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலிருந்தும் தர ஆய்வுக்காக எரிபொருள் மாதிரிகள் சேகரிக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
முறைப்பாடுகள்
மேலும் தெரிவிக்கையில்,“கடந்த மாதத்தில் மட்டும் பெட்ரோல் மற்றும் டீசல் தரம் குறைவாக இருப்பதாக, நுகர்வோரிடமிருந்து 100க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் எமக்கு கிடைத்துள்ளது.
நாட்டில் எங்களிடம் 1,200 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் உள்ளன. 100 இடங்களில் இருந்து 100 முறைப்பாடுகளை பெற்றிருப்பின், நாட்டின் 10 சதவீத நிரப்பு நிலையங்களில் தரம் குறைந்த எரிபொருள் உள்ளதென கருத முடியும்.
எரிபொருளில் இருந்து துர்நாற்றம் வருவதாகவும் லீட்டருக்கு பயணிக்கும் தூரத்தின் எண்ணிக்கை வழமையை விட குறைந்துள்ளது மற்றும் ஒக்கீட்டுக்கு ஏற்ப எரிபொருள் விநியோகிக்கப்படுவதில்லை என பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
தர பரிசோதனை
இதற்கமைய, இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் நுகர்வோர் ஆலோசனைக் குழு, குறித்த முறைப்பாடுகளை விசாரிக்க தீர்மானித்துள்ளது.
எனவே எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்படும்.”என கூறியுள்ளார்.

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri
