மின்வெட்டு நேரம் மேலும் நீடிக்கிறது! வெளியானது புதிய அறிவிப்பு
நாளாந்த மின்வெட்டு நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதற்கமைய, இன்று 03 மணித்தியாலங்களாக மின்வெட்டு நேரம் நீடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
தொழில்நுட்ப கோளாறு
நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் மூன்றாவது மின் உற்பத்தி செய்யும் இயந்திரம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக செயலிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
மின்வெட்டு நேரம் அதிகரிப்பு
இதன் காரணமாக மின்வெட்டு நேரம் நீடிக்கப்பட வேண்டியிருக்கும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் ரத்நாயக்க சற்று முன்னர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இதற்கமைய நாளாந்த மின்வெட்டு நேரம் 03 மணித்தியாலங்களாக நீடிக்கப்பட்டுள்ளதாக தற்போது அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
பராமரிப்பு பணிகள்
இதேவேளை, செயலிழந்துள்ள மின் உற்பத்தி இயந்திரத்தின் பராமரிப்பு பணிகள் 3 தொடக்கம் 5 நாட்கள் வரை தொடரும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.
மேலும்,பழுதுபார்க்கும் பணி முடியும் வரை மின் உற்பத்தியை நிர்வகிக்க எரிபொருள் மின் நிலையங்கள் பயன்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
நுரைச்சோலை அனல்மின் நிலையம் செயலிழப்பு - மின்வெட்டு நேரம் நீடிக்கும் |