நுரைச்சோலை அனல்மின் நிலையம் செயலிழப்பு - மின்வெட்டு நேரம் நீடிக்கும்
புதிய இணைப்பு
நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் மூன்றாவது மின் உற்பத்தி இயந்திரம் செயலிழந்துள்ளது.
இவ்வாறு செயலிழந்துள்ள மின் உற்பத்தி இயந்திரத்தின் பராமரிப்பு பணிகள் 3 தொடக்கம் 5 நாட்கள் வரை தொடரும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் பதிவில் இதனை தெரிவித்துள்ளார்.
CEB has informed that the Unit 3 of Norochcholai power plant has been shut down due to a steam leak. Maintenance work estimated to take 3-5 days. Fuel Power Plants will be utilized to manage the Power generation until the repair work is completed.
— Kanchana Wijesekera (@kanchana_wij) September 27, 2022
இந்த பதிவில்,பழுதுபார்க்கும் பணி முடியும் வரை மின் உற்பத்தியை நிர்வகிக்க எரிபொருள் மின் நிலையங்கள் பயன்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி செய்யும் இயந்திரம் செயலிழந்துள்ளது.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் மூன்றாவது மின் உற்பத்தி இயந்திரம் செயலிழந்துள்ளதாக மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக மின்வெட்டு நீடிக்கலாம் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். .
அதற்கமைய, மின்வெட்டு காலத்தை நீட்டிப்பது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது.
சேது-ஐஸ்வர்யா நிச்சயதார்த்தத்தில் நடந்த பரபரப்பு சம்பவம், தமிழ் செய்யப்போவது என்ன?- சின்ன மருமகள் சீரியல் Cineulagam
Super Singer Junior: ஒட்டுமொத்த அரங்கத்தையே அழ வைத்த பார்வையற்ற சிறுவன்... புல்லரிக்க வைத்த குரல் Manithan
அய்யனார் துணை சீரியல் படப்பிடிப்பு தளத்தில் நடிகை மதுமிதாவிற்கு ஏற்பட்ட சோகம்... வெளிவந்த வீடியோ Cineulagam