மின்வெட்டு நேரம் அதிகரிப்பு தொடர்பில் எரிசக்தி அமைச்சரின் புதிய அறிவிப்பு
நாளாந்த மின்வெட்டு நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ள நிலையில், மின்வெட்டு நேர அதிகரிப்பு தொடர்பில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.
எரிசக்தி அமைச்சரின் பதிவு
இந்த விடயம் தொடர்பில் டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், தனியார் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து மின்சாரம் கொள்வனவு செய்வதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
அதன் பிரகாரம், நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் மீளமைக்கப்படும் வரை, தனியார் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து மின்சாரம் கொள்வனவு செய்யப்படும்.
எனவே நாளை முதல் மின்வெட்டு அதிகரிக்கப்பட மாட்டாது என குறிப்பிட்டுள்ளார்.
தொழிநுட்ப கோளாறு
நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் மூன்றாவது மின் உற்பத்தி செய்யும் இயந்திரம் தொழிநுட்ப கோளாறு காரணமாக செயலிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இதன் காரணமாக, நாளாந்த மின்வெட்டு நேரம் 3 மணித்தியாலங்களாக நீடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் ரத்நாயக்க முன்னதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
PUCSL has granted approval for CEB to purchase power from Private Plants until Norochcholai Power Plant is restored & CPC will provide the necessary Diesel, Naphtha & Furnace Oil requirements to CEB to maintain the power generation without extending the power cuts from tomorrow.
— Kanchana Wijesekera (@kanchana_wij) September 27, 2022

ஆபரேஷன் சிந்தூர்... சுட்டு வீழ்த்தப்பட்ட ரஃபேல் விமானம்: உறுதி செய்த பிரெஞ்சு உளவுத்துறை News Lankasri

Super Singer: Duet Round சுற்றில் நடுவர்களை வியக்க வைத்த போட்டியாளர்கள்- இறுதி நடந்த குழப்பம் Manithan

Optical illusion: படத்தில் நூற்றுக்கணக்கான “7” களில் மறைந்திருக்கும் ”9” ஐ கண்டுபிடிக்க முடியுமா? Manithan
