ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேச்சுவார்த்தைக்கு தயாரான புட்டின்: ரஷ்யா முன்வைத்துள்ள நிபந்தணை
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைவருடனும் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக கிரெம்ளின் மாளிகை தெரிவித்துள்ளது.
குறித்த முடிவானது, நேற்றைய தினம்(08.05.2026) எடுக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய பேரவை தலைவர் அண்டோனியோ கோஸ்டா, புட்டினுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும், இதற்கு உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கியின் ஆதரவு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
பதற்றத்தின் மத்தியில் அடுத்தடுத்த மணிநேரங்கள்! விசிக அலுவலகத்திற்கு பலத்த பாதுகாப்பு - முடிவிற்காக காத்திருக்கும் தமிழகம்
ஐரோப்பிய நாடுகளுடனான ரஷ்யாவின் உறவு
இந்த விடயம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், புட்டின் எப்போதும் பேச்சுவார்த்தைக்குத் தயாராகவே இருப்பதாக மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஐரோப்பிய நாடுகள் விரும்பினால் இந்த உரையாடலை முன்னெடுத்துச் செல்லலாம், ஆனால் ரஷ்யா இதற்கு முன் முயற்சி எடுக்காது என அவர் தெளிவுப்படுத்தியுள்ளார்.

கடந்த 2022ஆம் ஆண்டு உக்ரைன் போர் தொடங்கிய பிறகு, ஐரோப்பிய நாடுகளே ரஷ்யாவுடனான உறவைத் துண்டித்துக் கொண்டன என்பதைச் சுட்டிக்காட்டிய பெஸ்கோவ், இப்போது அவர்களே முதல் அடியை எடுத்து வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
ரஷ்யாவுடனான உறவுகளை முழுமையாக முறித்துக் கொண்டது பிரஸ்ஸல்ஸ் (ஐரோப்பிய ஒன்றியத் தலைமையகம்) மற்றும் தனிப்பட்ட ஐரோப்பிய நாடுகளே தவிர, ரஷ்யா அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐரோப்பியத் தலைவர்கள் ரஷ்யாவை ஒரு ஆக்கிரமிப்பாளராகவும், புட்டினைப் போர்க்குற்றவாளியாகவும் கருதி வரும் நிலையில், ரஷ்யாவோ உக்ரைனுக்கு பில்லியன் டொலர்கள் பெருமதியான ஆயுதங்களை வழங்கி ஐரோப்பிய நாடுகளைப் போர் வெறியர்களாகச் சித்தரித்து வருகிறது.

தற்போது இரண்டாம் உலகப் போர் வெற்றி தினக் கொண்டாட்டத்தையொட்டி போர்நிறுத்த ஆலோசனைகள் ஒருபுறம் நடந்தாலும், ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான மோதல்கள் தொடர்ந்தும் நீடித்து வருகின்றன.
அதேபோன்று, இத்தாலியப் பிரதமர் மெலோனி மற்றும் அமெரிக்க வெளி விவகார அமைச்சர் ரூபியோ இடையிலான சந்திப்பில் ஈரான் போர் குறித்த கவலைகள் விவாதிக்கப்பட்டமை மத்திய கிழக்கில் நிலவும் பதற்றத்தையும் எடுத்துக் காட்டுகிறது.
நிலா வீட்டைவிட்டு சென்றதால் சோழன் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கில் குடும்பத்தினர்... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam
ஈஸ்வரியை ஜனனிக்கு எதிராக மாற்றும் கதிர், தர்ஷனார் வரப்போகும் பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam