புதுக்குடியிருப்பில் அதிகரித்துள்ள யானைகளின் தாக்கம்: மக்கள் விடுத்துள்ள கோரிக்கை
புதுக்குடியிருப்பில் காட்டு யானைகளின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் தமது வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக கிராம மக்கள் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் மந்துவில், மல்லிகைத்தீவு
போன்ற கிராமங்களில் கடந்த இரண்டு, மூன்று தினங்களாக தொடர்ச்சியாக காணிகளுக்குள் கூட்டமாக புகுந்த யானை பயிர்களை மிதித்து
நாசமாக்கியுள்ளதாக மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
யுத்தத்தினால் இடம்பெயர்ந்து மீள்குடியேறிய இந்த மக்கள் தமது வாழ்வாதாரமாக விவசாயம் மற்றும் தோட்டச்செய்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மக்களின் கோரிக்கை
இந்நிலையில், இந்த கிராமத்தில் யானையின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதனால், அப்பகுதி மக்கள் தமது வாழ்வாதாரத்தை இழக்க வேண்டிய நிலையேற்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கப்படுகிறது.

இந்த பிரச்சினை காரணமாக கிராமத்திற்குள் யானை உள்நுழையாதவாறு யானை வேலியினை அமைத்து தருமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இந்த பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




அமெரிக்க ஒப்பந்தத்தை மறுத்தால் ஜெலென்ஸ்கி கொல்லப்படலாம்... ரஷ்யாவில் இருந்து கசிந்த தகவல் News Lankasri