அரச ஊழியர்களுக்கான சம்பள குறைப்பு தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சரின் அறிவிப்பு
அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் அரசாங்கத்தின் நலன்புரித் திட்டங்கள் குறைப்பு தொடர்பில் அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.
இந்த விடயத்தை நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயம் தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ளார்.

அரசாங்கத்தின் நிதி நிலைமை
மேலும் தெரிவிக்கையில், அரசாங்கத்தின் நிதி நிலைமைகள் சவால் மிக்க நிலையில் காணப்படுகின்றன.
எனினும் அரசாங்க ஊழியர்களுக்கான சம்பளங்கள் தொடர்பில் தேவையற்ற அச்சம் கொள்ள தேவையில்லை.
அரச ஊழியர்களின் சம்பளங்கள் அரைவாசியாக குறைக்கப்பட உள்ளதாக பிரச்சாரம் செய்யப்படுகிறது.

சம்பள குறைப்பு
என்றபோதும் அரச ஊழியர்களின் சம்பளங்களோ அல்லது அரசாங்கத்தின் நலன்புரித் திட்டங்களோ குறைக்கப்படாது.
நிதிச் சவால்களை சரியான முறையில் முகாமைத்துவம் செய்து மக்களுக்கு சேவையாற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது என குறிப்பிட்டுள்ளார்.
அறிவுக்கரசி வீடியோவாக காட்டிய விஷயம், கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
தாயின் இறுதிச்சடங்கில் பங்கேற்க முடியாத சூழல் - 160 கிலோ எடையை 75 கிலோவாக குறைத்த மகன் News Lankasri