மனித - யானை மோதலைத் தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை

Ampara Elephant Sri Lanka Elephants
By Farook Sihan Sep 08, 2026 10:19 AM GMT
Report

அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர், காரைதீவு, சாய்ந்தமருது மற்றும் மாளிகைக்காடு ஆகிய பிரதேசங்களின் பல பகுதிகளில் அண்மைக்காலமாக காட்டு யானைகளின் நடமாட்டம் வெகுவாக அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் மத்தியில் தீவிர அச்சமும் பதற்றமும் ஏற்பட்டுள்ளது.

குறித்த பிரதேசங்களை அண்மித்துள்ள விவசாய நிலங்கள், மக்கள் குடியிருப்புகள் மற்றும் மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதிகளை நோக்கி இரவு நேரங்களில் காட்டு யானைகள் ஊடுருவுகின்றன.

இதனால் விவசாயிகள் தமது வாழ்வாதார நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாமலும், பொதுமக்கள் இரவு வேளைகளில் வீடுகளை விட்டு வெளியேற முடியாமலும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

தடுப்பு நடவடிக்கைகள் 

யானைகள் தொடர்ந்து குடியிருப்புப் பகுதிகளுக்குள் பிரவேசித்து வருவதால் மனித உயிரிழப்புகள் மற்றும் சொத்துச் சேதங்கள் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது.

மனித - யானை மோதலைத் தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை | Public Urge Department Wildlife Immediate Action

எதிர்காலத்தில் பாரிய அனர்த்தங்கள் சம்பவிப்பதற்கு முன்னர் வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் தலையிட்டுத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனப் பிரதேசவாசிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் உடனடியாக நேரடியாக வருகை தந்து நிலமையை ஆராய்ந்து, யானைகள் ஊடுருவுவதைத் தடுக்க நிரந்தரமான நடைமுறைச் செயற்திட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.

யானைகள் வழமையாக நடமாடும் பாதைகள் மற்றும் கிராமங்களுக்குள் நுழையும் இடங்களைக் கண்டறிந்து முறையான கண்காணிப்புப் பொறிமுறையை உருவாக்க வேண்டும்.

அவசர காலங்களில் பொதுமக்கள் உடனடியாகத் தொடர்புகொள்ளக்கூடிய வகையில் அவசர உதவிப் பிரிவையும் கண்காணிப்பையும் வலுப்படுத்த வேண்டும்.

"மனித உயிரிழப்புகள் அல்லது பாரிய சொத்து சேதங்கள் ஏற்பட்ட பின்னர் நடவடிக்கை எடுப்பதை விட, அசம்பாவிதங்கள் நடப்பதற்கு முன்னரே தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதே முக்கியமானது" எனப் பாதிக்கப்பட்ட மக்கள் கவலையுடன் தெரிவித்தனர்.

மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை முன்பு சுகாதார சீர்கேடு!

மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை முன்பு சுகாதார சீர்கேடு!

பாரிய ஊழல் மோசடியில் சிக்கப்போகும் பிரபல பெண் அரசியல்வாதி

பாரிய ஊழல் மோசடியில் சிக்கப்போகும் பிரபல பெண் அரசியல்வாதி

1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, வேப்பங்குளம்

02 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US