யாழில் 28 வருடங்களுக்கு பின் மீண்டும் இயங்கவுள்ள பொது சந்தை
யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை பொது சந்தை 28 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் இயங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. .
பல தீர்மானங்களின் பின்னர் ஆரம்பிக்கப்பட்டவுள்ளதாக கூறப்பட்ட வேளையில், இன்று(28.01.2026) முதல் இயங்க ஆரம்பித்துள்ளது.
பொது சந்தை
உள்நாட்டு யுத்தம் காரணமாக 1990ஆம் ஆண்டு கால பகுதியில் காங்கேசன்துறை பகுதியில் இருந்து மக்கள் வெளியேறிய நிலையில், சுமார் 28 வருடங்களுக்கு மேலாக அந்த பகுதியில் மக்கள் மீள் குடியேற அனுமதிக்காது உயர் பாதுகாப்பு வலயமாக குறித்த பிரதேசம் பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது.
பின்னரான கால பகுதியில் மக்கள் மீள் குடியேற அனுமதிக்கப்பட்ட நிலையில், வலி. வடக்கு பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட காங்கேசன்துறை பொது சந்தையை மீள சொந்த இடத்தில் இயங்க வைப்பதற்கான கட்டடங்கள் கட்டப்பட்டது.

அப்போது சந்தை ஆரம்பிக்கப்பட்ட போதிலும், மக்கள் மரக்கறிகளை கொள்வனவு செய்ய வருகை தருவது குறைவாக இருந்தமையால், வியாபாரிகள் மரக்கறி விற்பனையை கைவிட்ட நிலையில் , சந்தை கட்டடமும் மூடப்பட்டது.
முக்கிய தீர்மானங்கள்
இந்நிலையில், வலி. வடக்கு பிரதேச சபை மீள தெரிவான நிலையில், சந்தையை இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் சொந்த இடத்தில் இயங்க செய்வது எனவும், சந்தையை சூழவுள்ள பகுதிகளில் வீதியோர மரக்கறி விற்பனை, கடைகளில் மரக்கறி விற்பனையை இடைநிறுத்தி, சந்தையில் மாத்திரம் மரக்கறி விற்பனை மேற்கொள்ள வேண்டும் என தீர்மானம் எடுக்கப்பட்டது.
அத்துடன், சந்தை கட்டடத்தில் வியாபாரிகளுக்கான இட ஒதுக்கீடுகளையும் விரைந்து ஏற்படுத்தி கொடுக்கப்படும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, விரைவில் சந்தை வியாபார நடவடிக்கைகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், சந்தையில் வியாபாரத்திற்கு இடம்பெற்ற ஒருவர் இன்று வியாபார நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நிலா என் ஆளு, பத்திரமா கூட்டிட்டு போ, சோழனிடம் கூறிய ராகவ், அடுத்து நடந்தது?... அய்யனார் துணை சீரியல் Cineulagam