அரசின் செயற்பாடுகளால் வெறுப்படைந்து பதவி விலகிய பெண்
தேசிய மகளிர் ஆணைக்குழுவின் முதல் தலைவர் ரமணி ஜயசுந்தர இன்று (28.01.2026) பதவி விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர் பதவியேற்று நான்கு மாதங்களுக்குள், ஆணைக்குழுவை செயல்படுத்த அரசாங்கத்திடமிருந்து போதிய ஆதரவு இல்லாததைக் காரணம் காட்டியே அவர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.
பதவி விலகல் கடிதம்
ரமணி ஜெயசுந்தர தனது பதவி விலகல் கடிதத்தை நேற்று (27.01.2026) ஜனாதிபதியிடம் சமர்ப்பித்துள்ளார்.
2024 இல் நடைமுறைக்கு வந்த பெண்களுக்கு அதிகாரம் வழங்கும் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட இந்த ஆணைக்குழு, இலங்கையில் பெண்களுக்கான முதல் ஆணைக்குழுவாகும்.

2025 செப்டம்பரில் ரமணி ஜெயசுந்தரவுடன் நியமிக்கப்பட்ட நாளிலிருந்தே ஆணைக்குழுவுக்கு நிதி வழங்கவோ, சுயாதீனமான அலுவலக வசதிகளை வழங்கவோ, ஊழியர்களை ஒதுக்கவோ அரசாங்கம் தவறிவிட்டது.
பெண்கள் அதிகாரமளித்தல் குறித்த தேசிய கொள்கையை உருவாக்கி செயல்படுத்துவது ஆணைக்குழுவின் பணியாகும். பெண்களின் உரிமை மீறல்களை விசாரிக்கவும் இதற்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.