ஞானசார தேரருக்கு மீண்டும் பொதுமன்னிப்பு கோரி பொதுமக்கள் கையெழுத்து சேகரிப்பு
பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு மீண்டுமொரு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குமாறு வலியுறுத்தும் வகையில் பொதுமக்களின் கையொப்பங்கள் சேகரிப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டின் கீழ் விதிக்கப்பட்ட ஆறுவருட சிறைத்தண்டனையின் பிரகாரம் தற்போதைக்கு சிறைச்சாலையில் உள்ள கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கி விடுவிக்கக் கோரி பல்வேறு தரப்பினரும் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
கையொப்ப மனு
இதற்கிடையே குறித்த கோரிக்கைக்கு வலு சேர்க்கும் வகையில் 50 இலட்சம் பொதுமக்களின் கையொப்பங்களைப் பெற்றுக்கொள்ளும் கையெழுத்துப் பிரசார நடவடிக்கை வெள்ளிக்கிழமை (9) தென் மாகாணத்தை மையமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தித்தகல்லே ஆனந்தசிரி தேரர் தலைமையிலான மகா சங்கத்தினரால் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்தக் கையொப்ப மனு, பின்னர் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது.