கல்கிசை கடலில் நீராடச் சென்ற வெளிநாட்டவருக்கு நேர்ந்த விபரீதம் - பொலிஸார் தீவிர விசாரணை
கொழும்பு - கல்கிஸைப் பகுதியில் கடலில் நீராடச் சென்ற வெளிநாட்டு பயணி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் 43 வயதுடைய இந்தியப் பிரஜை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்றுமுன்தினம்(22.11.2026) கடலில் நீராடிக்கொண்டிருந்த இந்த இந்தியப் பயணி திடீரென நீரில் மூழ்கியுள்ளார்.
வெளிநாட்டு பயணி உயிரிழப்பு
உடனடியாகப் பொலிஸ் உயிர்காப்புப் பிரிவினரால் அவர் மீட்கப்பட்டு, களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எனினும், வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று(23.11.2026) திங்கட்கிழமை அவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கல்கிஸைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.