யாழில் இந்தியப் படகுப் பொருட்கள் பகிரங்க ஏல விற்பனை
இலங்கை கடற்பரப்புக்குள் எல்லை தாண்டிய குற்றச்சாட்டில் கைப்பற்றப்பட்ட, பின்னர் அரச உடமையாக்கப்பட்ட இந்தியப் படகுகளிலிருந்து மீட்கப்பட்ட பொருள்கள் யாழ்ப்பாணத்தில் பகிரங்க ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டன.
யாழ்ப்பாணம் கடற்றொழில் மற்றும் நீரியல்வளத் திணைக்களத்தால் நேற்று(07.04.2026) இந்த ஏல விற்பனை முன்னெடுக்கப்பட்டது.
நீண்டகாலமாக திணைக்களத்தின் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்த இலங்கை மற்றும் இந்தியப் படகுகளுக்குச் சொந்தமான பல்வேறு பொருள்கள் இதன் மூலம் ஏலம் விடப்பட்டன.
ஏல விற்பனை விவரம்
இந்திய படகுகளிலிருந்து கைப்பற்றப்பட்ட எரிவாயு சிலிண்டர்கள், எரிவாயு அடுப்புக்கள் மற்றும் மின்கலங்கள் உள்ளிட்ட பல பொருள்கள் இவ்வாறு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டன.

இந்த ஏல விற்பனையில் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பெருமளவான பொதுமக்கள் கலந்துகொண்டு, போட்டி போட்டுக்கொண்டு தங்களுக்குத் தேவையான பொருள்களை வாங்கியதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
அரச உடமையாக்கப்பட்ட இந்தப் பொருள்களை விற்பனை செய்ததன் மூலம் கணிசமான வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.


100 வருட பழமையான வீட்டில் மறைந்திருந்த பணக் குவியல்- அதிர்ச்சியடைந்த பிரித்தானிய தம்பதி News Lankasri
ரவி மோகன் விவாகரத்து வழக்கு.. மாதம் ரூ.40 லட்சம் கேட்ட ஆர்த்தி, நீதிமன்றம் அதிரடி உத்தரவு Cineulagam