மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி : பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்
2019ஆம் ஆண்டில் ராகம பொலிஸ் பிரிவின் வல்பொலவில் வசிக்கும் ஒரு பெண்ணைத் தாக்கி கொலை செய்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளியைக் கைது செய்ய, பொலிஸ் பொதுமக்கள் உதவியை நாடியுள்ளது.
நீர்கொழும்பு உயர் நீதிமன்றம் குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்தது. இந்நிலையில் அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியதால், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் விதிகளின்படி இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏதேனும் தகவல் தெரிந்தால்
பொலிஸாாரால் தேடப்படும் குற்றவாளி, ரணேபுர தேவகே ரணுக எரண்ட விஜேதுங்க என்ற 38 வயதுடைய ஆண் ஆவார்.

அவரது முகவரி: எண் 35/1, உக்கஹேன, வல்பொல, ராகம.
குற்றவாளி குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால், ராகம பொலிஸ் பொறுப்பதிகாரியை 071 859 1604 என்ற எண்ணிலோ அல்லது குற்றப்பிரிவு பொறுப்பதிகாரியை 071 962 7561 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளுமாறு பொலிஸ் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.