இரண்டு ஆண்டுகளாகியும் நிறைவு செய்யப்படாத வீதி!
இரண்டு ஆண்டுகளாகியும் அபிவிருத்தி பணிகள் முடிக்கப்படாத நிலையில் 100 மீற்றர் நீளமான வீதியொன்றினால் பொது மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பணிகளை விரைந்து முடித்துக்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்படாதிருப்பது தொடர்பில் பொதுமக்கள் கருத்துக்களை பகிரும்போது தங்கள் அதிருப்தியை வெளியிட்டதோடு, உரிய தரப்பு மீது தங்கள் சாடல்களையும் முன்வைத்திருந்தார்.
இரண்டு வருடங்களுக்கும் அதிக காலத்தை எடுத்துக் கொண்டுள்ள இந்த வீதியின் பணிகள் உரிய திட்டமிடல்களை மேற்கொள்ளாது முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மழைவீழ்ச்சியினால் பாதிப்பு
அது தொடர்பில் வேலைத் தளத்தில் இருந்தவர்களுக்கு சுட்டிக்காட்டிய போதும் அவர்கள் அது தொடர்பில் கவனமெடுத்திருக்கவில்லை என வீதிக்கு அருகில் உள்ள வீட்டின் உரிமையாளர் ஒருவர் தன் கருத்துக்களை பகிர்ந்து கொண்டிருந்தார்.
முதல் தடவை வீதியின் இரு மருங்கிலும் உள்ள சீமெந்துக்கட்டுக்களை கட்டும் வேளையில் அவை அக்காலத்தில் ஏற்பட்ட மழைவீழ்ச்சியினால் பாதிக்கப்பட்டிருந்தது. இரு பக்கங்களிலும் உள்ள கட்டுக்கள் துண்டு துண்டாக உடைந்து போய் கிடந்தன என தொடர்ந்து குறிப்பிட்டிருந்தார்.
சீமெந்து கலவையின் தரம் குறித்தும் அவர் கேள்வியெழுப்பியிருந்ததோடு உழவியந்திரம் ஒன்றின் சில்லு உராய்ந்து கொண்டதனால் ஏற்பட்டிருந்த சேதத்தினையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்தளவுக்கு சீமெந்து கலவையின் அளவு பாலத்தின் கட்டுமானத்திற்கு பொருத்தமற்றதாக இருப்பதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.
குமுழமுனை வீதி
முல்லைத்தீவில் தண்ணீரூற்று குமுழமுனை வீதியையும் அளம்பில் வீதியையும் இணைக்கும் உடுப்புக்குளத்திற்கு ஊடாக செல்லும் இந்த வீதியின் முறிப்பு பகுதியிலேயே இந்த அசௌகரியத்தை ஏற்படுத்தக்கூடிய வீதி இருக்கின்றது.
ஓரே எத்தனிப்பில் முடிக்கப்படாத போது பயணிகளுக்கான வேலைச்சிரமத்தினை ஏற்படுத்தும் என்பது வெளிப்படை. இன்றைய நிலையில் பாதையில் பயணம் செய்வோருக்கு அச்சதை ஏற்படுத்தும் காட்சிகள் அதிகம் இருப்பதையும் அவதானிக்கலாம்.
ஒப்பந்தக்காரர்கள் பொறுப்பற்ற முறையில் செயற்பட்டுள்ளனர் என்பதற்கு கட்டுமானத்தின் காட்சிகள் சான்று பகிருகின்கின்றன.
இதற்கு உடனடியாக பொருத்தமான நடவடிக்கைகளை எடுத்து மாற்றங்களை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |