இரகசிய நிகழ்வுகள் குறித்து தகவல் கோரும் பொலிஸார்
வார இறுதி நாட்களில் ஒழுங்கமைக்கப்பட்ட விருந்து நிகழ்வுகள் மற்றும் பிற நிகழ்வுகள் கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதுபோன்ற நடவடிக்கைகள் இரகசியமாக நடைபெற்றால் உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையம் அல்லது 119 என்ற அவசர பொலிஸ் இலக்கத்திற்கு தெரிவிக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன இதனை தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற நடவடிக்கைகளைத் தடுக்க பல சிறப்பு பொலிஸ் குழுக்கள் தயார்நிலையில் இருக்கின்றன. இவ்வாறான செயற்பாடுகள் தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகளை மீறுவதாகும்.
இந்த காலகட்டத்தில் மதுபானம் விற்பனை மற்றும் விநியோகம் கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது என்றும், தடையை அவமதிப்பவர்களை பொலிஸ் தேடி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
