சம்பள உயர்வு கோரி மன்னாரில் போராட்டம்: வீதிக்கிறங்கிய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்
மன்னார் (Mannar) உள்நாட்டலுவல்கள் அமைச்சின் கீழ் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சுகயீன விடுமுறை கோரி அமைதிவழி போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த போராட்டமானது, இன்றைய தினம் (24.04.2024) மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, சம்பள உயர்வு, மேலதிக நேர கொடுப்பனவு, பதில் கடமை, காகிதாகி செலவுகள் உள்ளடங்களாக பல்வேறு கொடுப்பனவுகளை பெற்றுக் கொள்வதில் பல வருடங்களாக நீடித்து வரும் இழுபறி நிலையை உடனடியாக நிவர்த்தி செய்து தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விடுக்கப்பட்டுள்ள கோரிக்கைகள்
மேலும், மாதாந்த கொடுப்பனவை அரச சுற்றறிக்கைக்கு அமைவாக 7500 ரூபாய் அதிகரித்து வழங்கு, வெளிக்கள கொடுப்பனவை 300இல் இருந்து 3000 ரூபாவாக அதிகரி, போன்ற பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு உத்தியோகத்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
மேலும், 11 வருடங்களுக்கு அதிகமாக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்ற நிலையில் இதுவரை பிரச்சினைகள் தீர்க்கப்பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |













சகோதரி மகள்களைக் காப்பாற்ற அருவிக்குள் குதித்த இலங்கைத் தமிழருக்கு நேர்ந்த துயரம்: சமீபத்திய தகவல் News Lankasri

Ehirneechal: மருத்துவமனையில் உயிருக்கு போராடும் ஈஸ்வரி- மருத்துவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல் Manithan

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலின் நேரம் திடீர் மாற்றமா?... என்ன விஷயம் பாருங்க, ரசிகர்கள் வருத்தம் Cineulagam

சரிகமப சீசன் 5 போட்டியாளர் பாடிக்கொண்டிருக்கும் போதே அவரது வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகமான அரங்கம் Cineulagam

மீனாவிடம் மன்னிப்பு கேட்ட ரோஹினி, அருண் பற்றிய உண்மையை கூறிய முத்து.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
