அமைச்சர் விஜித ஹேரத்துடன் ஆனந்தசங்கரி முக்கிய சந்திப்பு
தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுச்செயலாளரும் மூத்த அரசியல் தலைவருமான வீ. ஆனந்தசங்கரிக்கும், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.
இந்த சந்திப்பானது நேற்று (03.07.2026) இடம்பெற்றுள்ளது.
அனுபவப்பகிர்வு
இந்தச் சந்திப்புத் தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தனது உத்தியோகபூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் விடுத்துள்ள பதிவில்,
இலங்கையின் மூத்த அரசியல் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வீ. ஆனந்தசங்கரியைச் சந்திப்பதற்கான நல்வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

இந்தச் சந்திப்பின் போது, தனது நீண்டகால அரசியல் அனுபவங்களை அவர் என்னுடன் விரிவாகப் பகிர்ந்து கொண்டார்.
நாட்டின் அரசியல் துறையில் அவர் ஏற்படுத்திய சிறந்த முன்னுதாரணங்களையும், நாட்டுக்காக ஆற்றிய பாரிய பங்களிப்புகளையும் நான் பாராட்டுகின்றேன்.
அத்துடன் அவருக்கு எனது நன்றியையும் மதிப்பையும் தெரிவித்துக்கொள்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.