இராணுவத்தினரால் பாடசாலை மாணவர்களுக்கு உதவித் திட்டங்கள் வழங்கி வைப்பு! (Photos)
இராணுவத்தினரால் வவுனியா நகரம் மற்றும் அதனை அண்டிய பாடசாலைகளில் கல்விகற்கும் வறுமைகோட்டுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டதுடன், பாடசாலைகளுக்கும் மடிக்கணனிகளும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந் நிகழ்வானது வவுனியா காமினி மகாவித்தியாலயத்தில் 56 ஆவது இராணுவ படையணியின் ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, பார்வைகுறைபாடுகள் உள்ள மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டதுடன், மூக்குக் கண்ணாடிகள் பரிசோதிக்கப்பட்டு தேவையானவர்களுக்கு மூக்குக் கண்ணாடிகளும் வழங்கிவைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் 56 வது இராணுவப் படையணியின் கட்டளைத் தளபதி சமன் லியனகே, 562 வது படைப்பிரிவின் தளபதி சேனக பிரேமரட்ண, வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் திஸாலடிசில்வா பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




