மாகாண சபைத் தேர்தலைப் பழைய முறையில் விரைவில் நடத்தப் பரிசீலிக்கின்றது அநுர அரசு
பழைய முறைமையின் கீழ் மாகாணசபைத் தேர்தலை விரைவில் நடத்துவது குறித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் பரிசீலித்து வருகின்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்லை நிர்ணய செயல்முறை முடிவடைந்த பின்னரே தேர்தல் நடத்தப்படும் என்று அரசு முன்னர் கூறியிருந்தது.
அதிகரிக்கும் அழுத்தம்
எனினும், புதிய எல்லை நிர்ணய செயல்முறை சிக்கலானது, நீண்டது என்பதால், அடுத்த தேர்தலை, 1988ஆம் ஆண்டு மாகாண சபைத் தேர்தல் சட்டத்தின் கீழ் நடத்த ஆலோசிக்கப்பட்டுள்ளது என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது.
தாமதமின்றி மாகாண சபைத்தேர்தலை நடத்த அரசாங்கம் மீது அழுத்தம் அதிகரித்து வரும் நிலையிலேயே இந்தத் திட்டத்தை அரசு பரிசீலிக்கின்றது என்றும் கூறப்படுகின்றது.
இந்தநிலையில், கடந்த வாரம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அமர்வில் இந்தியப் பிரதிநிதி மாகாண சபைகள் தேர்தலை நடத்துமாறு அரசை வலியுறுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



