திருகோணமலை துறைமுக ஊழியர்களின் பிள்ளைகளுக்கு புலமை பரிசில் வழங்கும் நிகழ்வு!
2024 ஆம் ஆண்டு ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்த, கிழக்கு மாகாண துறைமுக ஊழியர்களின் பிள்ளைகளுக்கு புலமை பரிசில் மானியம் மற்றும் பரிசுகள் வழங்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை(19) சீனக்குடா துறைமுக அதிகார சபை மண்டபத்தில் நடைபெற்றது.
"உங்கள் பணம் உங்கள் பிள்ளைகளுக்கு" என்ற தொனிப்பொருளில், அகில இலங்கை துறைமுக பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் பிரசங்க மெதவத்த தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
புலமை பரிசில் வழங்கும் நிகழ்வு
அகில இலங்கை துறைமுக பொது ஊழியர் சங்கத்தின், ஊழியர் கூட்டுறவு வங்கியினால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது, திருகோணமலை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களை சேர்ந்த துறைமுக ஊழியர்களின் 28 பிள்ளைகளுக்கு மானியமும் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில், வெளி விவகார மட்டும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா பிரதம அதிதியாக கலந்து கொண்டு, பரிசில்களை மாணவர்களுக்கு வழங்கி வைத்தார்.
இந்த நிகழ்வில், அகில இலங்கை துறைமுக பொது ஊழியர் சங்கச் செயலாளர் சரத் புர்ணிய ஸ்ரீ, இலங்கை துறைமுக அதிகார சபையின் திருகோணமலை துறைமுக வதிவிட முகாமையாளர் சரத்குமார உள்ளிட்ட, திருகோணமலை துறைமுக ஊழியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.









