தமிழர் பகுதியில் கோயில் திருவிழாவிற்கு சென்றவருக்கு நேர்ந்த அவலம்!
திருகோணமலை- தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிப்பொத்தானை பகுதியில் பட்டாசு வெடித்ததில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவமானது நேற்று(6) 09ஆம் கொலனி, சதாம் நகர் பிள்ளையார் கோயிலில் இடம்பெற்ற திருவிழா ஊர்வலத்தின் போது இடம்பெற்றுள்ளது.
அதே பகுதியில் வசித்து வரும் மூன்று பிள்ளைகளின் தந்தையான கணபதிப்பிள்ளை காளிராசா (வயது45) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
மேலதிக விசாரணை
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கோயிலில் இடம்பெற்ற திருவிழா ஊர்வலத்தின் போது பட்டாசு கொளுத்தப்பட்டது.
இதன்போது, ஒரு பட்டாசு வெடிக்காத நிலையில் அதனைக் கண்டு குறித்த நபர் காலால் தடவிய போது பட்டாசு வெடித்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரனையில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் தற்போது தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் தம்பலகாமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 மணி நேரம் முன்

பிரித்தானிய அரச குடும்பத்தில் கோவிட் தடுப்பூசியால் புற்றுநோய்: அமெரிக்க மருத்துவரால் வெடித்த சர்ச்சை News Lankasri
