எல்ல விபத்தின் எதிரொலி.. நாளை முதல் கடுமையான சட்டம் நடைமுறைக்கு!
ஆபத்தான வகையில் மேலதிக பாகங்கள் பொருத்தப்பட்ட வாகனங்களுக்கு எதிராக நாளை முதல் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என போக்குவரத்து பிரதியமைச்சர் பிரியந்த குணசேன தெரிவித்துள்ளார்.
பல்வேறு ஒலிகளுடன், பல வண்ணங்களில் நின்று நின்று ஒளிரும் மின் விளக்குகளுடன் பயணிக்கும் வாகனங்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்படும் என போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன தமது பேஸ்புக் பக்கத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
சம்பவ இடத்தில் மீட்புப் பணியில்
கடந்த வியாழக்கிழமை எல்ல - வெல்லவாய வீதியின் 24ஆவது மைல்கல் அருகே எதிரே வந்த சொகுசு ஜீப்பின் பின்புறத்தில் பேருந்து மோதி, வீதியில் அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு இரும்பு வேலியை உடைத்து சுமார் 1000 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.
தங்காலை நகர சபையின் ஊழியர்களும் அவர்களது உறவினர்களும் பயணித்த பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானது.
34 பேர் பயணித்த இந்த பேருந்தில் 15 பேர் உயிரிழந்தனர்.
காயமடைந்தவர்களில், சம்பவ இடத்தில் முதலில் மீட்புப் பணியில் ஈடுபட்ட இராணுவ சிறப்புப் படையின் அதிகாரி ஒருவர் உட்பட, 13 பேர் இன்னும் பதுளை போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 மணி நேரம் முன்

வெளிச்சத்துக்கு வந்த அறிவுக்கரசி செய்த வேலை, ஆபத்தில் ஜீவானந்தம்.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam
