அடுத்த சில நாட்களுக்கு வானிலையில் மாற்றம்.. வடக்கு - கிழக்குக்கும் எச்சரிக்கை!
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அடுத்த சில நாட்களுக்கு மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன்படி, வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் குருநாகல் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
சில இடங்களில் 75 மில்லிமீட்டருக்கும் மேல் கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேவையான நடவடிக்கைகள்
அத்துடன், மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலையில் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.
இந்நிலையில், மழையுடன் கூடிய தற்காலிக காற்று மற்றும் மின்னல் அபாயத்தைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




