பொருளாதார பிரச்சினையால் சிக்கலில் மாட்டிக்கொள்ளும் பெண்கள்! அரசாங்கம் வழங்கவுள்ள நிவாரணம்
நுண்நிதி கடன்களால் நாட்டிலுள்ள பெரும்பாலான பெண்கள் தொடர்ச்சியாக பல சிக்கல்களுக்கு முகங்கொடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நுண்நிதி கடன்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக உபக்குழு ஒன்றை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
முன்மொழிவு
கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக அதிகாரமளித்தல் தொடர்பான அமைச்சக ஆலோசனைக் குழுவால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இவ்விடயம் குறித்து ஆராய்ந்து உரிய நடவடிக்கைகளை முன்மொழிய, நாடாளுமன்ற உறுப்பினர் சமன்மலி குணசிங்க தலைமையில் உபக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்மானம் அமைச்சக குழு உறுப்பினர்களின் முன்மொழிவின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதாகவும் அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே தெரிவித்துள்ளார்.
தீர்மானம்
இதேவேளை நுண்நிதி கடன்களால் கிராமப்புறப் பெண்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
எதிர்காலத்தில் நுண்நிதி கடன் பிரச்சினையை எதிர்கொள்ளும் மக்களுக்கு உதவுவதற்காக, தொடர்புடைய நிறுவனங்களின் அதிகாரிகளை அழைத்து விவாதிக்கவும், பொருத்தமான திட்டங்களை முன்வைக்கவும் இந்தக் குழு நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் கூறியுள்ளார்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

அமெரிக்காவில் தோசையால் புகழ்பெற்ற இலங்கை தமிழர்! கனடா, ஜப்பானிலும் ரசிகர்கள்..யார் அவர்? News Lankasri

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை உயிரிழப்பு: உடலை பரிசோதித்த பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி News Lankasri
