மன்னாரில் போராட்டம்: போக்குவரத்து பாதிக்கப்பட்டமையால் மக்கள் விசனம்(VIDEO)

Mannar Sri Lanka Economic Crisis Sri Lanka Sri Lanka Fuel Crisis
By Ashik Jul 12, 2022 03:08 PM GMT
Report

அரச போக்குவரத்து சேவையை முன்னெடுக்க முடியாத வகையில் தனியார் பேருந்து உரிமையாளர்கள் தமது பேருந்துகள் ஊடாக வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் மக்களுக்கும் தனியார் பேருந்து சங்கத்தினருக்கும் இடையில் தர்க்க நிலை ஏற்பட்டதோடு, அரச போக்குவரத்து சேவையை முன்னெடுக்க முடியாத வகையில் தனியார் பேருந்துகளை வீதியின் இடை நடுவில் நிறுத்தியுள்ளனர்.

இதற்கு மக்கள் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியதோடு, குறித்த தனியார் பேருந்துளை அவ்விடத்தில் இருந்து அகற்றி அரச போக்குவரத்து சேவையை முன்னெடுக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

போராட்டம்

மன்னாரில் போராட்டம்: போக்குவரத்து பாதிக்கப்பட்டமையால் மக்கள் விசனம்(VIDEO) | Protests Mannar Cause People Raffic Disruption

தனியார் போக்குவரத்து சங்கத்தினர் சுமுகமான போக்குவரத்து சேவையை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் நீண்ட நேரம் பேருந்துக்காக காத்திருந்த மக்கள் கொதிப்படைந்த நிலையில் தர்க்கத்தில் ஈடுபட்டதோடு அரச போக்குவரத்து சேவையை முன்னெடுக்க முடியாத வகையில் வீதியை மறித்து தரித்து நின்ற தனியார் பேருந்துகளை அகற்ற முயற்சி செய்துள்ளனர்.


இதன் பின்னர் தனியார் பேருந்துகளின் உரிமையாளர்கள் தமது பேருந்துகளை அவ்விடத்தில் இருந்து எடுத்துச் சென்றுள்ளனர்.

மன்னாரில் போராட்டம்: போக்குவரத்து பாதிக்கப்பட்டமையால் மக்கள் விசனம்(VIDEO) | Protests Mannar Cause People Raffic Disruption

அதனை தொடர்ந்து நீண்ட நேரத்தின் பின் அரச போக்குவரத்துச் சேவைகள் வழமை போல் இடம்பெற்றது. எனினும் தனியார் போக்குவரத்துச் சங்கத்தினர் முன்னெடுத்த போராட்டம் பொது மக்களை பாதிக்காத வகையில் முன்னெடுத்திருக்க வேண்டும் என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

எரிபொருள் தட்டுபாடு

மன்னார் டிப்போவுக்கு வழங்கப்பட்ட டீசலில் மன்னார் மாவட்ட தனியார் போக்குவரத்துச் சங்க பேருந்துகளுக்கும் வழங்குமாறு உரிய தரப்பினால் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

அண்மையில் வழங்கப்பட்ட டீசலில் தற்போது வரை 2413 லீட்டர் டீசல் மாத்திரமே தனியார் பேருந்துகளுக்கு வழங்கப்பட்டது.எனினும் அதனை தொடர்ந்து டீசல் எவையும் தனியார் பேருந்துகளுக்கு வழங்கவில்லை.

மன்னாரில் போராட்டம்: போக்குவரத்து பாதிக்கப்பட்டமையால் மக்கள் விசனம்(VIDEO) | Protests Mannar Cause People Raffic Disruption

தனியார் பேருந்து சங்க உரிமையாளர்கள் மன்னார் டிப்போ அதிகாரிகளிடம் டீசல் கோரிய போதும் வழங்கப்படவில்லை.

இந்த நிலையில் கடந்த 5 ஆம் திகதி காலை தனியார் பேருந்துகள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டதோடு அரச போக்குவரத்து சேவையை மேற்கொள்ள முடியாத வகையில் தனியார் பேருந்துகளினால் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதோடு தமக்கான எரிபொருளையும் வழங்க கோரிக்கை விடுத்தனர்.

இதனால் போக்குவரத்துச் சேவைகள் சிறிது நேரம் முழுமையாக பாதிக்கப்பட்டதோடு மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்தனர். இந்த நிலையில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மேல் தலைமையில் அரச மற்றும் தனியார் போக்குவரத்துச் சங்க பிரதிநிதிகளுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் இடம் பெற்றது.

மன்னாரில் போராட்டம்: போக்குவரத்து பாதிக்கப்பட்டமையால் மக்கள் விசனம்(VIDEO) | Protests Mannar Cause People Raffic Disruption

குறித்த கலந்துரையாடலில் பிரதேசச் செயலாளர் ,இராணுவம் ,பொலிஸ் உயர் அதிகாரிகள், கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது இலங்கை போக்குவரத்து சபையின் எண்ணைக் குதங்களில் இருந்து தனியார் பேருந்து சேவை பேருந்துகளுக்கு டீசல் வழங்குவது என்ற அரச நிலைப்பாட்டிற்கு அமைய மன்னார் சாலைக்கு 6600 லீட்டர் டீசல் வருமாக இருந்தால் அவற்றில் 2500 லீட்டர் டீசலையும்,13,200 லீட்டர் டீசல் வருமாக இருந்தால் 5000 லீட்டர் டீசல் தனியார் பேருந்து சேவை பேருந்துகளுக்கு வழங்குவது என குறித்த கலந்துரையாடலின் போது இணக்கம் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தனியார் பேருந்து சங்க உரிமையாளர்கள் முன்னெடுத்த பகிஷ்கரிப்பு போராட்டம் கைவிடப்பட்டது.

நோற்றைய தினம் (11) கிடைக்க பெற்ற எரிபொருள் தனியார் பேருந்து சங்கத்தினருக்கு பகிர்ந்து வழங்கப்படவில்லை.

மன்னாரில் போராட்டம்: போக்குவரத்து பாதிக்கப்பட்டமையால் மக்கள் விசனம்(VIDEO) | Protests Mannar Cause People Raffic Disruption

இவ்விடயம் தொடர்பாக உரிய தரப்பினரிடம் அவர்கள் வினவிய போதும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. இந்த நிலை இன்று செவ்வாய்க்கிழமை(12) காலை முதல் தனியார் போக்குவரத்துச் சங்கத்தினர் போக்குவரத்து சேவையை இடைநிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட னர்.

இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை(12) காலை முதல் வீதி மறிப்பு உட்பட பொதுமக்கள் பாதிக்கப்படும் வகையில் மன்னார் பஸார் பகுதியில் சம்பவம் இடம் பெற்ற போதும் அவ்விடத்திற்கு வந்த பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இடம்பெற்ற பிரச்சினைகளை வேடிக்கை பார்த்ததோடு, தடுப்பதற்கு முயற்சிகள் எவையும் மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.                        

மரண அறிவித்தல்

வடமராட்சி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US