நாட்டில் போராட்டங்கள் வெடிக்க காரணம் இதுவே..! அநுரவின் கேள்விகளுக்கு பதிலடிக் கொடுத்த டக்ளஸ்

Sri Lankan Tamils Anura Kumara Dissanayaka Douglas Devananda Protest
By Theepan May 22, 2026 11:12 AM GMT
Report

ஆட்சியாளர்களின் அனுமதியுடன் இந்த நாட்டில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருக்கவில்லை. மாறாக அந்தந்தக் காலச் சூழல்கள் தான் இளைஞர்களிடம் அது திணிக்கப்பட்டுள்ளது என டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.

சமீபத்தில் கொழும்பில் நடந்து முடிந்த தேசிய வீரர்கள் தின விழாவில் ஜனாதிபதி பேசிய கருத்திற்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.    

பருவநிலை மாற்றம் ஒரு வாழ்வாதார அச்சுறுத்தல்: சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு ஐநா பொதுச்சபை ஆதரவு

பருவநிலை மாற்றம் ஒரு வாழ்வாதார அச்சுறுத்தல்: சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு ஐநா பொதுச்சபை ஆதரவு

ஆயுதப் போராட்டம்

இவர் மேலும் குறிப்பிடுகையில்,

தமிழ் மக்களாக இருந்தாலும்  சரி சிங்கள மக்களாக இருந்தாலும் சரி ஆட்சியாளர்களின் அனுமதியுடன் தமக்கான அபிலாசைகளை வென்றெடுக்கும் போராட்டங்களை முன்னெடுக்கவில்லை.


மாறாக, அந்தந்தக் காலச் சூழல்களில் அந்தந்த மக்களுக்கு ஏற்பட்ட நிர்ப்பந்தத்தினாலேயே தான் ஆயுதப் போராட்டம் இந்த நாட்டில் முன்னெடுக்கப்பட்டது.

இந்த நாட்டில் நடைபெற்ற ஆயுதப் போராட்டத்தில் பங்கேற்ற போராளிகளில் ஒருவன் என்ற அடிப்படையில் இந்த கருத்தை கூறுகின்றேன்.

நாட்டில் போராட்டங்கள் வெடிக்க காரணம் இதுவே..! அநுரவின் கேள்விகளுக்கு பதிலடிக் கொடுத்த டக்ளஸ் | Protests In Country Permission Rulers Douglas

அதேவேளை, தமிழ் மக்களைப் பொறுத்தளவில் தாங்கள் தமிழர்களாக இருக்க வேண்டும் என்பதற்காக இலங்கையர் என்ற அடையாளத்தைக் கைவிட தயாராக இருக்கவில்லை.

தமிழர்களாகவும் அதேநேரம் இலங்கையர்களாகவும் இருக்க வேண்டும் என்பது தான் அவர்களது அபிலாசையாக இருக்கின்றது.

அந்தவகையில், இன்று முன்னெடுக்கப்பட்ட வன்முறைகள் அனைத்தும் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

அதனடிப்படையில் இன்னொரு முறை தமிழர்கள் அவ்வாறானதொரு ஆயுதப் போராட்டத்தை சிந்திக்கக் கூட மாட்டார்கள் என நான் கூறுகின்றேன்.

அநுர அரசு 

அதேநேரத்தில், அநுரவிற்கு இருக்கக் கூடிய அனுபவங்களைக் கொண்டு அவர் இனிமேல் அவ்வாறான யுத்தம் ஒன்று நடைபெற இடமளிக்கமாட்டேன் என்று கூறியிருக்கின்றார். அது நல்ல விடயம்.  இவ்வாறான சூழலில் தமிழ் மக்களுடைய அபிலாசைகளை தீர்க்கக் கூடிய வகையில் அவர்களது பிரச்சினைகளுக்கான தீர்வுகளை பெற்றுக்கொடுக்கவும் அவர் முயற்சிக்க வேண்டும்.

நாட்டில் போராட்டங்கள் வெடிக்க காரணம் இதுவே..! அநுரவின் கேள்விகளுக்கு பதிலடிக் கொடுத்த டக்ளஸ் | Protests In Country Permission Rulers Douglas

நாம் நீண்டகாலமாக சொல்லிவரும் இலங்கை, இந்திய ஒப்பந்தத்தினூடாக ஏற்படுத்தப்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் இருந்து ஆரம்பிக்க வேண்டும்.

அதை முன்னெடுப்பதற்காக நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பங்கு அதிகாரத்தை கொண்டுள்ள இந்த அநுர அரசு அதற்கான ஒரு சட்டத்திருத்தத்தை கொண்டுவந்து விரைவாக மாகாணசபைத் தேர்தலை நடத்தி எமது மக்களின் அபிலாசைகளையாவது தீர்த்துவைப்பதற்கான முயற்சியை முன்னெடுக்க வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாக இருக்கின்றது என சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ்.பலாலி பொலிஸாருக்கு எதிராக வழக்குத் தாக்கல்

யாழ்.பலாலி பொலிஸாருக்கு எதிராக வழக்குத் தாக்கல்

செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வெளிநாடுகளுக்கு அனுப்ப முடியாது..! ட்ரம்ப் நிபந்தனையை மறுத்த ஈரான்

செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வெளிநாடுகளுக்கு அனுப்ப முடியாது..! ட்ரம்ப் நிபந்தனையை மறுத்த ஈரான்

நெடுந்தீவு மக்களின் போக்குவரத்து சேவைக்கான தீர்வு  

இதேவேளை, நெடுந்தீவு மக்களின் கடல் போக்குவரத்து பிரச்சினைகள் தொடர்பில் நாளாந்தம் பல தொலைபேசி அழைப்புகள் எனக்கு வந்துகொண்டிருக்கின்றன.

இந்த பிரச்சினை இன்று மட்டுமல்ல அல்ல எமது ஆட்சிக் காலத்திலும் இருந்தது. ஆனாலும் அன்று இவ்வாறான பிரச்சினைகள் வந்தபோது நாம் ஏதோ ஒரு வகையில்  உடனடியான தீர்வுகளை மக்களுக்கு பெற்றுக்கொடுத்திருந்தோம்.

தற்போது நெடுத்தீவின் போக்குவரத்து சேவையானது குமுதினி, வடதாரகை மற்றும் நெடுந்தாரகை ஆகிய மூன்று படகுகளின் மூலம் மேற்கொண்டுவருகின்றது. ஆனால் அவை மூன்றும் தற்போது பழுதடைந்துள்ளமையினால் அந்த படகுகளில் திருத்த வேளைகள் இடம்பெறுகின்றன.

நாட்டில் போராட்டங்கள் வெடிக்க காரணம் இதுவே..! அநுரவின் கேள்விகளுக்கு பதிலடிக் கொடுத்த டக்ளஸ் | Protests In Country Permission Rulers Douglas

இதேவேளை,  நெடுந்தீவின் போக்குவரத்து சேவையை வீதி அபிவிருத்தி அதிகார சபையே முன்னெடுத்து வருகின்றது.

குறிப்பாக எமது ஆட்சிக் காலத்தில் பேசு பொருளாக இருந்த இந்த பிரச்சினை, துறைசார் தரப்பினருடன் ஆராயப்பட்டதன் அடிப்படையில் வீதி அபிவிருத்தி அதிகார சபையே தமக்கான கடமைப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று நாம் வலியுறுத்தியதன் அடிப்படையில் அவர்கள் அதை ஏற்று இலவசமான போக்குவரத்து சேவையை முன்னெடுத்து வந்திருந்தனர்.

ஆனாலும் இன்று குறித்த மூன்று படகுகளும் பழுதடைந்து செயற்பாடற்று இருப்பதால் மாற்று வழியின்றி மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

கடன் உதவி

இந்தக் கடற்பரப்பில் சேவையை முன்னெடுக்கும் ஆற்றலுள்ள படகொன்றை வாடகைக்கு அமர்த்தி மக்களுக்கான சேவையை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைக்கின்றோம்.

அத்துடன் கடந்த காலத்தில் இவ்வாறான ஏற்பாடுகள் இடம்பெற்றிருக்கின்றன என்பதையும் ஜனாதிபதி கருத்தில் கொள்ள வேண்டும் என்பதையும் நான் நினைவூட்டுகின்றேன். அதேபோன்று, கூட்டுறவுச் சங்கமும் “தேவா ரதம்” என்ற ஒரு படகை வைத்திருந்தது. அதுவும் தற்போது பழுதடைந்த நிலையிலேயே இருக்கின்றது.

நாட்டில் போராட்டங்கள் வெடிக்க காரணம் இதுவே..! அநுரவின் கேள்விகளுக்கு பதிலடிக் கொடுத்த டக்ளஸ் | Protests In Country Permission Rulers Douglas

எனவே கொழும்பிலுள்ள தேசிய கூட்டுறவு சபையிடம் பரிந்துரை செய்து குறித்த படகை திருத்துவதற்கான ஒரு கடனுதவியையும் பெற்றுக்கொடுக்க வேண்டும் என நான் ஜனாதிபதியிடம் கோருகின்றேன்.

அத்துடன்,  குறித்த கடனுதவியானது நெடுந்தீவு கூட்டுறவு சங்கங்களுக்கு மட்டுமல்லாது தீவக பகுதியில் இருக்கும் அனைத்து கூட்டுறவு சங்கங்களுக்கும் கிடைக்கத்தக்க வகையில் நடவடிக்கை எடுக்கமாறு கோரிக்கை விடுக்கின்றேன்.

தற்பொழுது மக்கள் உணவு தட்டுப்பாடு மற்றும் விலையேற்றத்திற்கு முகம் கொடுத்துக் கொண்டிருப்பதால் தேசிய கூட்டுறவு சபையுடன் கதைத்து தீவக கூட்டுறவு சங்கங்களுக்கு இலகு கடன் கிடைக்கச் செய்வதனூடாக மக்களுக்கு பொருட்கள் மற்றும் சேவைகள் இலகுவாக கிடைக்க செய்ய முடியும் என்று நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.


4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

15 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, இணுவில்

08 Aug, 2021
மரண அறிவித்தல்

காரைநகர், London, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Quincy-sous-Sénart, France

06 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, கோண்டாவில் கிழக்கு

06 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, Birmingham, United Kingdom

06 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிகுளம், முதலியார்குளம்

06 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி, கொழும்பு, London, United Kingdom

07 Aug, 2018
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், Villetaneuse, France

02 Aug, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், Gonesse, France

01 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

06 Aug, 2021
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US