செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வெளிநாடுகளுக்கு அனுப்ப முடியாது..! ட்ரம்ப் நிபந்தனையை மறுத்த ஈரான்

Donald Trump United States of America Iran-Israel Cold War Iran-Israel War Iran-US Conflict
By Amal May 22, 2026 07:39 AM GMT
Report

அமெரிக்கா - இஸ்ரேலின் முக்கிய நிபந்தனையான "அணு ஆயுதத் தயாரிப்பிற்குப் பயன்படும் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வெளிநாடுகளுக்கு அனுப்ப வேண்டும்" என்ற கோரிக்கையை ஈரான் திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.

தங்களின் வசம் உள்ள யுரேனியம் இருப்பு ஈரானை விட்டுக் கடத்தப்படக் கூடாது என அந்நாட்டின் புதிய உச்ச தலைவர் ஆயதுல்லா மொஜ்தபா கமேனி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தற்போது ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பாகிஸ்தானின் மத்தியஸ்தத்துடன் தற்காலிகப் போர்நிறுத்தம் மற்றும் அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.

பலத்த பாதுகாப்புடன் வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ள 21 பாதாள உலக உறுப்பினர்கள்

பலத்த பாதுகாப்புடன் வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ள 21 பாதாள உலக உறுப்பினர்கள்

இந்தச் சூழலில், ஈரானின் அணு ஆயுதக் கனவைத் தகர்க்கும் பொருட்டு, அதன் செறிவூட்டப்பட்ட யுரேனியம் முழுவதையும் நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோர் வலியுறுத்தி வருகின்றனர்.

பிடிவாதமாக இருக்கும் ஈரான்

இருப்பினும், இந்த நிபந்தனைக்கு ஈரான் உடன்படவில்லை. இதுகுறித்து ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு ரகசியத் தகவல் அளித்துள்ள ஈரானின் மூத்த அதிகாரிகள் இருவர், "யுரேனியத்தை வெளிநாடுகளுக்கு அனுப்பினால், அது எதிர்காலத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடுக்கக்கூடிய தாக்குதல்களுக்கு ஈரானை மிகவும் பலவீனமான நாடாக மாற்றிவிடும் என்று அரசு நம்புகிறது.

எனவே, யுரேனியம் இருப்பை நாட்டை விட்டு வெளியேற்றக் கூடாது என்பதில் ஈரானிய நிர்வாகம் உறுதியாக உள்ளது" என்று தெரிவித்துள்ளனர்.

செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வெளிநாடுகளுக்கு அனுப்ப முடியாது..! ட்ரம்ப் நிபந்தனையை மறுத்த ஈரான் | Iran Rejects Trump S Condition

கடந்த பெப்ரவரி மாதம் அமெரிக்க - இஸ்ரேல் படைகள் ஈரான் மீது நடத்திய வான்வழித் தாக்குதலுடன் தொடங்கிய இந்த யுத்தத்தில், தற்போது தற்காலிகப் போர்நிறுத்தம் நடைமுறையில் இருந்தாலும், அமைதிப் பேச்சுவார்த்தையில் பெரிய முன்னேற்றம் ஏதும் ஏற்படவில்லை.

சந்தேகம் வெளியிட்ட ஈரான் அதிகாரிகள்

இந்தத் தற்காலிகப் போர்நிறுத்தம் என்பது அமெரிக்கா மீண்டும் வான்வழித் தாக்குதல்களைத் தொடங்குவதற்கு முன்னதாக ஈரானை ஏமாற்றத் திட்டமிட்டுள்ள ஒரு தந்திரோபாயச் சதி என்று ஈரான் அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

ஈரானின் தலைமைப் பேச்சுவார்த்தையாளர் முகமது பாகர் காலிபாஃப் கூறுகையில், அமெரிக்கர்கள் புதிய தாக்குதல்களுக்குத் தயாராகி வருவதை அவர்களின் வெளிப்படையான மற்றும் மறைமுகமான நகர்வுகள் காட்டுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

மறுபுறம், ஈரான் அமைதி உடன்படிக்கைக்கு வரவில்லை என்றால் மீண்டும் தாக்குதல் நடத்தத் தயாராக இருப்பதாக ஜனாதிபதி ட்ரம்ப் எச்சரித்துள்ளார். யுரேனியத்தை வெளிநாட்டிற்கு அனுப்ப முடியாது என்று ஈரான் பிடிவாதம் பிடித்தாலும், இந்த விவகாரத்தைத் தீர்க்க சில சாத்தியமான வழிகள் உள்ளதாக ஈரானிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வெளிநாடுகளுக்கு அனுப்ப முடியாது..! ட்ரம்ப் நிபந்தனையை மறுத்த ஈரான் | Iran Rejects Trump S Condition

"சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) மேற்பார்வையின் கீழ், எங்களிடம் உள்ள யுரேனியத்தின் செறிவூட்டல் வீரியத்தைக் குறைப்பது போன்ற தீர்வுகளைச் செயல்படுத்தலாம்" என்று ஒரு அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச அணுசக்தி முகமையின் தரவுகளின்படி, கடந்த 2025 ஜூன் மாதம் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஈரானிய அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியபோது, ஈரானிடம் 60 சதவீதம் வரை செறிவூட்டப்பட்ட 440.9 கிலோ யுரேனியம் இருந்தது.

அதில் தற்போது 200 கிலோவிற்கும் அதிகமான யுரேனியம் இஸ்ஃபஹான் மற்றும் நடான்ஸ் ஆகிய பகுதிகளில் உள்ள நிலத்தடி சுரங்க வளாகங்களில் பத்திரமாகப் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது.

ஈரான் தனது மருத்துவத் தேவைகளுக்காகவும், ஆராய்ச்சி உலைகளுக்காகவும் மட்டுமே இந்த யுரேனியத்தைப் பயன்படுத்துவதாகத் தொடர்ந்து கூறி வருகிறது. ஈரான் தனது நிலைப்பாட்டைக் கடுமையாக்கியுள்ளதால், இந்த அணுசக்தி விவகாரம் அமெரிக்கா-இஸ்ரேல் உடனான அமைதிப் பேச்சுவார்த்தையை மேலும் சிக்கலாக்கியுள்ளது.

தொடரும் சீரற்ற வானிலை - சில பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிப்பு

தொடரும் சீரற்ற வானிலை - சில பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிப்பு

இலங்கை பெரும் ஆபத்தில்..! அநுர அரசிடம் சஜித் அவசர வேண்டுகோள்

இலங்கை பெரும் ஆபத்தில்..! அநுர அரசிடம் சஜித் அவசர வேண்டுகோள்


10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, அமெரிக்கா, United States

05 Jul, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US