பொலிஸாரின் அறிவிப்பை பொருட்படுத்தாத சில போராட்டக்காரர்கள்! போராட்டக்களத்தின் தற்போதைய நிலவரம்(Live)
கொழும்பு - காலிமுகத்திடல் போராட்டக்களத்தில் உள்ள கூடாரங்களை அகற்றுமாறு போராட்டக்காரர்களுக்கு பொலிஸாரால் அறிவிப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந்த கூடாரங்கள், கொட்டகைகளை அகற்றுவதற்கு இன்று மாலை ஐந்து மணி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
பொலிஸாரின் அறிவிப்பு
காலிமுகத்திடலில் கூடாரங்கள், கொட்டகைகள் அமைத்திருப்பதன் மூலம் பொதுமக்களுக்கு இடைஞ்சல் ஏற்பட்டுள்ளதாகவும், அதன் காரணமாக அவற்றை அகற்றிக்கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சிலர் தற்போது போராட்டக்களத்தில் உள்ள கூடாரங்களை அகற்றும் நடவடிக்கையில் போராட்டக்காரர்கள் ஈடுப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
காலிமுகத்திடல் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த நூலகம் பாதுகாப்பாக வேறு இடத்திற்கு இடம்மாற்றப்படுகின்றது. இதேவேளை பயிர்செய்கை செய்யப்படடிருந்த இடங்களும் அகற்றப்பட்டுள்ளன.
போராட்டக்காரர்களின் பிடிவாதம்
இந்நிலையில் சில போராட்டக்காரர்கள் என்ன நடந்தாலும் தமது கூடாரங்கள், கொட்டகைகளை அகற்றப்போவதில்லை என தெரிவித்துள்ளனர்.
இதேவேளை பொலிஸாரின் அறிவுறுத்தல்களை பின்பற்றாதவர்களுக்கு எதிராக தராதரம் பாராமல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்களின் உரிமைகள் பறிக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமென பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.