முல்லைத்தீவு நகரில் கண்டன போராட்டம் முன்னெடுப்பு (Photos)
முல்லைத்தீவு நகரில் இன்று (22.09.2022) காலை கண்டன போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ரவிகரன், மயூரன் கைது
வட மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் மற்றும் மயூரன் ஆகியோரை நேற்று (21.09.2022) மாலை முல்லைத்தீவு தலைமை பொலிஸ் நிலையத்துக்கு வருமாறு அழைத்த பொலிஸார் அவர்களிடம் வாக்குமூலம் பெற்ற பின்னர் கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்த பின்னர் இன்றையதினம் முல்லைத்தீவு நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
தொல்லியல் திணைக்களத்தினரால் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கண்டன போராட்டம்
இந்த நிலையில் தமிழ் மக்களின் காணிகள் அபகரிக்கப்படுவதற்கு எதிராகவும், நீதிமன்ற உத்தரவை மீறி பௌத்த கட்டுமானங்கள் இடம்பெறுவதற்கு எதிராகவும், ஜனநாயக வழியில் போராட்டம் மேற்கொண்டவர்களை கைது செய்த பொலிஸாரின் செயற்பாட்டை கண்டித்தும் இன்றைய தினம் முல்லைத்தீவு நகரில் போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பிரதேச சபை உறுப்பினர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், பொது மக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டு குறித்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல் - கீதன்








டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 8 மணி நேரம் முன்
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan