முல்லைத்தீவில் உயிரிழந்த சிறுமிக்கு நீதிகோரி போராட்டம்
முல்லைத்தீவு – உடையார்கட்டு பகுதியில் மர்மமாக உயிரிழந்த சிறுமிக்கு நீதிகோரி நாளை காலை (20) கிராம மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவட்ட செயலகத்தில் நாளை முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் கள உத்தியோகத்தர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றை பெண்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளி மற்றும் ஆரம்பக்கல்வி, பாடசாலை உட்கட்டமைப்பு மற்றும் கல்வி சேவைகள் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வா (Piyal Nishantha de Silva) சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
வடக்கில் குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக அதிகரித்துவரும் சிறுவர்கள் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன்ராகவனும் (Surenragavan) கருத்து தெரிவித்துள்ளதுடன் பிரதமரின் கவனத்திற்கு கொண்டுசென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி...........
முல்லைத்தீவில் மர்மமாக உயிரிழந்த சிறுமியின் மரணம் தொடர்பிலான காரணம் வெளியானது