கொடுத்த வாக்கை காப்பாற்றாத மகிந்த ராஜபக்ச! மீண்டும் சர்ச்சைக்குள் உத்தியோகபூர்வ இல்லம்
கொழும்பிலுள்ள அரசாங்கத்திற்கு சொந்தமான உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வெளியேறி 2 வாரங்களுக்கும் மேலாகியும், வீட்டை முறையாக ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு குற்றம் சாட்டியுள்ளது.
ஜனாதிபதிகளின் சிறப்பு சலுகைகளை நீக்கும் சட்டம் கடந்த 10 ஆம் திகதி நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, மகிந்த ராஜபக்ச 24 மணி நேரத்திற்குள் விஜேராம மாவத்தையில் உள்ள அரசாங்க இல்லத்திலிருந்து வெளியேறி தங்காலையிலுள்ள தனது தனிப்பட்ட இல்லமான கார்ல்டன் இல்லத்திற்குச் சென்றார்.
இதன்போது இரண்டு வாரங்களுக்குள் வீட்டை உத்தியோகபூர்வமாக அரசாங்கத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மகிந்த ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.
இரண்டு வார கால அவகாசம் 24 ஆம் திகதியுடன் முடிவடைந்தது. இது தொடர்பாக நினைவூட்டல் அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான பல உள்நாட்டு வெளிநாட்டு செய்திகளை தொகுத்து வருகிறது இன்றைய நாளுக்கான லங்காசிறியின் செய்திகளின் தொகுப்பு நிகழ்ச்சி...



