ஜனாதிபதியின் இல்லத்தை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம்!
மிரிஹானவில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இல்லத்திற்கு முன்பாக பெண்கள் குழுவொன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தலைமையிலான சமகி வனிதா பலவேகயவினால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு தொடர்பான கடிதம் ஒன்றை ஜனாதிபதியிடம் கையளித்ததன் பின்னர் குறித்த குழுவினர் இந்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
நாட்டு மக்கள் படும் இன்னல்களை வலியுறுத்தி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
This is outside the residence of Pres @GotabayaR in Mirihana. A few brave women led by @Hirunikaconnect of @womenforsjb have started a protest after handing him a letter regarding the soaring cost of living. I dunno if he realizes that people are absolutely SUFFERING. pic.twitter.com/gTQEaANx5K
— Harsha de Silva (@HarshadeSilvaMP) March 5, 2022