ஹோட்டல் அறையில் தங்கியிருந்த காதலர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி
கம்பஹா, சப்புகஸ்கந்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹோட்டலில் தங்கியிருந்த காதல் ஜோடியை இரகசியமாக வீடியோ எடுத்த குற்றச்சாட்டில் ஹோட்டலின் முகாமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் மஹர எண் 02 நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராகம பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
ஹோட்டல் அறை
சப்புகஸ்கந்த பொலிஸ் நிலையத்தின் குற்றத் தடுப்புப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆதாரங்களை முன்வைத்துள்ளனர்.

கடந்த 31 ஆம் திகதி ஹோட்டலில் ஒன்லைனில் அறையை முன்பதிவு செய்த காதலர்கள், மாலை 4 மணியளவில் ஹோட்டலுக்கு சென்றுள்ளனர்.
இரவில் அவர்கள் அறையில் இருந்தபோது, ஒரு சிறிய துளை வழியாக ஒரு flash வெளிச்சம் ஒன்றை அவதானித்துள்ளனர்.
பின்னர், இது குறித்து விசாரித்தபோது, சந்தேக நபர் அவர்களை கையடக்க தொலைபேசியில் வீடியோ எடுத்திருப்பது உறுதி செய்யப்பட்டது.
வீடியோக்கள்
சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் பொலிஸாருக்கு முறைப்பாடு செய்துள்ளனர். அதற்கமைய, பொலிஸார் அங்கு சென்று சந்தேக நபரின் இரண்டு கையடக்க தொலைபேசிகளை ஆய்வு செய்தபோது, அவற்றில் அந்தரங்க வீடியோக்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். விசாரணைகள் முழுமையடையாததால், சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு பொலிஸார் நீதிமன்றத்தை கோரியுள்ளனர்.
முன்வைக்கப்பட்ட தகவல்களை கருத்தில் கொண்ட கூடுதல் நீதவான், சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
பிரித்தானிய இராணுவ உதவியுடன் ரஷ்யா கொடியுடன் சென்ற எண்ணெய் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா News Lankasri
சுட்டு வீழ்த்தப்பட்ட 100க்கும் அதிகமான உக்ரைனிய ட்ரோன்கள்: அமெரிக்க ஏவுகணை வீழ்த்திய ரஷ்யா News Lankasri
ஜாமினில் வெளியே வந்தாலும் மயில் குடும்பத்தினர் பாண்டியனுக்கு கொடுக்கப்போகும் அடுத்த அதிர்ச்சி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam